தனது கண்ணுக்குக் கீழ் சிக்கிக் கொண்ட கொக்கிகளை அகற்ற, மீன் ஒன்று மனிதர்களிடம் உதவி கோரும் அபூர்வ வீடியோ ஒன்று வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் Ningaloo வளைகுடாவுக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் செல்லும் Jake Wilton, தண்ணீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரும் கூட. அப்படி அவர் தண்ணிருக்குள் செல்லும்போது manta ray என்னும் ஒருவகை மீன் ஒன்று மீண்டும் மீண்டும் அவரருகே வந்திருக்கிறது.
வழக்கமாக அப்பகுதியில் புகைப்படம் எடுப்பவர் என்பதால், Wiltonக்கு அந்த மீன் அவருக்கு பழக்கமான Freckles என்ற பெயர் கொண்ட மீன் என்பது தெரியவந்துள்ளது.
மீண்டும் மீண்டும் அவரருகே வரவே, அதற்கு ஏதோ பிரச்சினை என்பதை அறிந்து கொண்ட Wilton அதன் அருகில் சென்று பார்த்திருக்கிறார்.
அப்போதுதான் அதன் கண்ணுக்கடியில் கொக்கிகள் மாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார் Wilton. வெளியாகியுள்ள, மகாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றுடன் முடியும் அந்த காணொளி, Freckles, Wilton மற்றும் அவரது சகாக்களிடம் உதவி கோருவதைக் காணலாம்.
அந்த கொக்கிகள் அகற்றப்படாவிட்டால் அந்த மீன், நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்து விடலாம் என்பதால் அந்த கொக்கிகளை அகற்ற முயன்றிருக்கிறார் Wilton.
ஆனால் ஆழ் கடல் நீந்துபவர்களால் அதிக நேரம் தண்ணீருக்குள் இருக்க முடியாது என்பதால், Wilton அடிக்கடி தண்ணீர்ப்பரப்புக்கு மேலே வந்திருக்கிறார்.
Wiltonஉடன் வந்த படகிலிருந்த Halls என்பவர் கூறும்போது, Wilton தனக்கு உதவப்போகிறார் என்பது அந்த மீனுக்கு தெரிந்திருக்கிறது, அதனால்தான், அவர் பல முறை தண்ணீர் மட்டத்திற்கு மேல் வந்தும், அந்த மீன் அதே இடத்திலேயே அசையாமல் நின்றுகொண்டிருந்திருக்கிறது என்கிறார்.
பல முறை முயன்றும் Frecklesஇன் கண்ணுக்கடியில் இருந்த கொக்கிகளை எடுக்க முடியாத நிலையில், கடைசியாக ஒரு முறை தண்ணீரில் குதித்த Wilton, எப்படியோ அந்த கொக்கிகளை வெற்றிகரமாக அகற்றிவிட்டார்.
Wilton அகற்றப்பட்ட அந்த கொக்கிகளுடன் தண்ணீர் பரப்புக்கு மேலே வந்து மகிழ்ச்சியுடன் போஸ்கொடுக்கும் புகைப்படத்தையும் காணலாம்.
மீன் ஒன்று மனிதர்களிடம் உதவி கோரிய அந்த அபூர்வ சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
=”https://www.dailymail.co.uk/static/mol-adverts/1428/mol-adverts.embedded-video.css