ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரில் இன்று காலை 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
Eelamurasu Australia Online News Portal