அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி ஆலோசகராக இந்தியரான அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக நாடுகளின் பல்வேறு திட்டங்களுக்கு கடன் அளித்து நிதியுதவி செய்யும் உலக வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த நிதி ஆலோசகராக இந்தியவை சேர்ந்த பெண்ணான் அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று வெளியிட்டார்.

தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிதி ஆலோசகராக பணியாற்றிவரும் அன்ஷுலா கன்ட்-டின் திறமையால் சுமார் 3800 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதி இருப்பும், 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளும் இவ்வங்கியிடம் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal