செய்திமுரசு

முல்லை யேசுதாசன் காலமானார்!

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி)  மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக சென்றதுடன், அங்கு திரைப்பட துறையில் ஆர்வம் கொண்டவராக திரைப்படங்கள் உருவாக்கப்படுவதை கற்றுக்கொண்டார். மீண்டும் 1991 ஆம் ஆண்டு தாயகத்துக்கு திரும்பிய அவர் திரைப்படம் எடுக்கும் ஆவலில் இயக்குநர் தாசனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். முதல் முதல் செவ்வரத்தம் பூ, எதிர்காலம் கனவல்ல பேன்ற  குறும்படங்களை இயக்கிய இவரின் நடிப்பு திறனை ...

Read More »

கொரோனா குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர் உயிரிழப்பு!

சீனாவில், கொரோனா கிருமித்தொற்றுக் குறித்து முன்கூட்டியே எச்சரித்த மருத்துவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளார். அவர் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனை இன்று காலை அதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலகளவில் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய கொரோனா கிருமியைப் பற்றி டாக்டர் லீ வென் லியாங் (Li Wen Liang) இதற்கு முன்னர் எச்சரித்தார். ஆனால், அவ்வாறு செய்ததற்காக உள்ளூர்க் பொலிஸார் அவருக்குக் கண்டனம் விடுத்திருந்தனர். இதற்கு முன், அவரது மரணம் குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்தியை வூஹான் நகர மத்திய ...

Read More »

தமிழ் மொழியிலேயே தேசிய கீதத்தை பாடுவோம்!-அப்துல்லா மஃறூப்

தமிழ் பேசும் நாம் தமிழ் மொழியில் தான் தேசிய கீதத்தை பாடுவோம் இதனையே தமிழ் பேசும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் இதனை இந் நாட்டு அரசாங்கம் உணரவில்லை அடிப்படை உரிமைகளே இவ்வாறு மறுக்கப்படுகிறது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் அல் ஹிக்மா பாடசாலையில் இன்று (06)இடம் பெற்ற பல்கலைக்கழகம்,கல்வியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளை கௌரவித்து மற்றும் பாடசாலைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் ...

Read More »

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி!

மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் ; விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது குறித்த விசாரணையின் போது மாந்தை கோவில் நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்ததற்கு அமைவாக வருகின்ற சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் ; 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி மாலை வரை குறித்த பகுதியில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பதற்கான அனுமதியை மன்னார் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கியுள்ளது. கடந்த தவணையின் போது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ...

Read More »

ஆஸ்திரேலிய நூலகத்திற்கு தடுப்பு முகாம் அகதியின் நூல் நன்கொடை !

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி, நியூசிலாந்தில் வாழ்ந்து வருபவர் பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதி. பத்திரிகையாளரான இவர், ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், இத்தடுப்பு அனுபவத்தை ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலாக அவர் எழுதியிருந்தார். ஆஸ்திரேலிய அரசின் அகதிகள் கொள்கையை பெரிதும் கேள்விக்கு உள்ளாக்கும் இந்நூலின் 10 பிரதிகளை ...

Read More »

சீனாவுக்கான சேவையை இரத்து செய்துள்ள விமான நிறுவனங்களின் விபரம்!

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த சீனாவின் பிரதான பகுதிளுக்கான விமானங்களை தற்காலிமாக இரத்து செய்துள்ள அல்லது குறைத்துள்ள விமான நிறுவனங்களின் விபரத்தை சி.என்.என். செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. வட அமெரிக்கா 1. அமெரிக்கன் ஏயார்லைன்ஸ் – மார்ச் 27 வரை இடைநிறுத்தம் 2. யுனிடெட் ஏயர்லைன்ஸ் – மார்ச் 28 வரை இடைநிறுத்தம் 3. டெல்டா ஏயர்லைன்ஸ் – ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம் 4. ஏயார் கனடா – பெப்ரவரி 29 வரை இடைநிறுத்தம் ஆசிய – ஓசியானியா 1. ஏயார் எசியா ...

Read More »

கோத்தாபய ராஜபக்ஷவின் சுதந்திரதின உரையின் அரசியல் அர்த்தம்!

கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் 72 ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற தேசிய வைபவத்தின் போது நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அடுத்த ஐந்து வருடங்களுக்கு தான் முன்னெடுக்கவிருக்கும் கொள்கைகளை தெளிவாக விளக்கினார். இன மற்றும் மதக்குழுக்கள் உட்பட ஒவ்வொரு குழுமத்தினரும் சமத்துவமான உரிமைகளை அனுபவிக்கக்கூடிய இலங்கையொன்றை கட்டியெழுப்பப்போவதாக அவர் கூறினார். ஆனால் ,அதேவேளை சிங்கள பௌத்தர்களின் பரந்துபட்ட மேலாதிக்கத்தின் கீழேயே இந்த உரிமைகளளை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகத்தையும் அவர் ...

Read More »

முல்லைத்தீவில் ஒருவர் சுட்டுக்கொலை !

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள குளமொன்றுக்கு அருகிலிருந்து இன்று (06) அதிகாலை குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் காவல் துறை , உள்நாட்டு துப்பாக்கி மூலம் குறித்த நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு ...

Read More »

சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய தடை!

சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலிய சமூகத்தின் சுகாதாரமும் நலனும் முதன்மையானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைப் பெற்றவர்கள் தவிர எவரும் சீனாவிலிருந்தோ சீனா வழியாக பயணித்தோ ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது. ஆஸ்திரேலியாவின் இத்தீவிர எல்லைக்கட்டுப்பாட்டு ...

Read More »

பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கை ஹெக் செய்து 30 மில்லியன் ரூபா கொள்ளை!

ஹோமாகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 30 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக தங்கள் கணக்கிற்கு மாற்றிமைக்காகவும், அதே பல்கலைக்கழகத்திலிருந்து மேலும் 100 மில்லியன் ரூபாவையும் தங்கள் கணக்குகளுக்கு மாற்ற முயற்சித்த குற்றச்சாட்டிற்காகவும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் இரண்டு வெளிநாட்டினர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர் கம்பளையில் வசிப்பவர் ஆவர். அவர் பல்கலைக்கழகத்தின் தரவுகளை ஹெக் செய்து, அந்த நிதியை வெளிநாட்டினர் இருவரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாகவும் சிறிலங்கா  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் வெளிநாட்டு பிரஜைகள் உள்ளடங்கலாக மூவரும் ...

Read More »