முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள குளமொன்றுக்கு அருகிலிருந்து இன்று (06) அதிகாலை குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் காவல் துறை , உள்நாட்டு துப்பாக்கி மூலம் குறித்த நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal