செய்திமுரசு

போதைப்பொருள் கடத்தவர்களுக்கு எதிராக மரணத் தண்டனை விதிக்கப்பட்டே தீரும்!

எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் கடத்தவர்களுக்கு எதிராக மரணத் தண்டனை விதிக்கப்பட்டே தீரும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் பொலன்னறுவையில் இன்று (21) காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். “இலங்கையின் மொத்த சனத்தொகையில்,1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கும், 18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர்.

Read More »

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை!

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை கொள்முதல் செய்யாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை தடுப்போம் என்று கூறிய ஈரான் அதிபருக்கு ஆதரவு பெருகியுள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ...

Read More »

மனுஸ்-நவுறு தடுப்பு முகாம்களின் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு போராட்டம்!

சட்டவிரோதமாக ஆபத்தான படகு பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்துவைப்பதற்கு லேபர் கட்சி முடிவு செய்ததன் 5வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் அகதிகள் நல அமைப்புக்கள் நாடளாவிய ரீதியில் அமைதிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு மனுஸ் மற்றும் நவுறு தடுப்பில் முகாமில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு தடுத்து வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் இதுவரை 12 உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 1600 பேர் குறித்த தீவுகளில் தங்க ...

Read More »

48 ஆண்டுகளாக தொடரும் பயங்கரவாதத் தடைச்சட்டம்!

இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திர தாகத்தை ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அச் சட்டம் இன்னமும் ...

Read More »

திலீபன் உட்பட 18 பேரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்!

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தென்னாசிய விவகார ஆய்வாளரும், கல்வியாளருமான பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இலங்கை தமிழரான திலீபன் ஞானேஸ்வரன், அவரின் மனைவி மற்றும் குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டை அவர் சுமத்தியுள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு அமைப்புக்களும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடு ...

Read More »

பறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்!

தென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த காணொளி வைரலாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் ஒண்டர்பூம் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டுச் சென்ற சிறிய ரக உள்நாட்டு விமானம் விபத்தில் சிக்கியது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் விமானத்தின் ஒரு பக்க இறக்கை தீப்பிடித்து எரிந்தது. அதைப் பார்த்ததும் பயணிகள் அச்சமடைந்து அலறினார்கள். இருந்தும் பதட்டப்படாத விஞ்ஞானிகள் சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் கீழ் நோக்கி திருப்பி தரை ...

Read More »

வடக்கு மாகாண முதல்வரை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தவராசா அழைப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அழைப்பு விடுத்துள்ளார். வட மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் இன்று முடங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையிலேயே வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறாக அதன் செயற்பாடுகளை முடங்கவிடாது வட மாகாண சபையின் அமைச்சர் சபை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை என்ற விடயப் பரப்பில் விவாதித்து தீர்வொன்றைக் ...

Read More »

யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம்! – ஆய்வு மகாநாடு

யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு எதிர்வரும் 21-22 திகதிகளில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் கொள்கைவகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவுள்ளன. யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுனங்களின் இணையம் இந்த ஆய்வு மகாநாட்டை ஒழுங்கு செய்து நடத்துகிறது. முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகைதந்து தமது ஆய்வுக்ட்டுரைகளைச் சமர்ப்பிக்கிறார்கள். ...

Read More »

பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல் பாவனை நிறுத்தம்!

ஆஸ்திரேலியாவிலுள்ள தங்களது உணவகங்கள் அனைத்திலும் plastic straw-பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களை முற்றாக தடைசெய்துவிட்டு காகிதத்தால் ஆன உறிஞ்சுகுழல்களை அறிமுகம் செய்யவுள்ளதாக McDonald’s நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு உணவகங்களில் பரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் McDonald’s நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பாவனையை தடைசெய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும், 2020-ஆம் ஆண்டுக்கு முதல் ஆஸ்திரேலியாவிலுள்ள தங்களது 970 கிளைகளிலும் பிளாஸ்டிக் பாவனையை முற்றாக களைவது தங்களது நோக்கம் என்றும் McDonald’s தெரிவித்துள்ளது. ...

Read More »

நிலைமாறுகால நீதி கிடைக்குமா?

நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்திலும் இந்த அமர்வுகள் ...

Read More »