திலீபன் உட்பட 18 பேரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்!

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தென்னாசிய விவகார ஆய்வாளரும், கல்வியாளருமான பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இலங்கை தமிழரான திலீபன் ஞானேஸ்வரன், அவரின் மனைவி மற்றும் குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டை அவர் சுமத்தியுள்ளார்.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு அமைப்புக்களும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்ட திலீபன் உட்பட 18 பேரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.