ஆஸ்திரேலியாவிலுள்ள தங்களது உணவகங்கள் அனைத்திலும் plastic straw-பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களை முற்றாக தடைசெய்துவிட்டு காகிதத்தால் ஆன உறிஞ்சுகுழல்களை அறிமுகம் செய்யவுள்ளதாக McDonald’s நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு உணவகங்களில் பரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் McDonald’s நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் பாவனையை தடைசெய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும், 2020-ஆம் ஆண்டுக்கு முதல் ஆஸ்திரேலியாவிலுள்ள தங்களது 970 கிளைகளிலும் பிளாஸ்டிக் பாவனையை முற்றாக களைவது தங்களது நோக்கம் என்றும் McDonald’s தெரிவித்துள்ளது.
McDonald’s நிறுவனம் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலுள்ள தனது கடைகளில் இத்தகையை நடவடிக்கையை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.