செய்திமுரசு

அவுஸ்திரேலிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 3 ஆயிரம் படை வீரர்கள் அழைப்பு!

அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அனைப்பதற்கு 3 ஆயிரம் படை வீரர்களை அழைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்தார்.   அஸ்திரேலியாவின் தெற்கு , நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருகிறது. விக்டோரியா மாகாணத்தில் தீ பரவி வருகின்ற நிலையில் அப் பகுதிகளில் வசிக்கின்ற சுமார் 1 லட்சம் பேர் வரை வெளியேறுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்தோடு குறித்த காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலேயே தீயை கட்டுக்குள் ...

Read More »

கோத்தாபயவின் ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி!

அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்வாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில், 04.01நேற்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது அரசதலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர், இந்த நீண்ட நெடிய வரலாற்றினை அவர் அறிந்திருப்பதாக எமக்குத் ...

Read More »

2019 – சர்வதேச போக்குகள்!

2019ஆம் ஆண்டின் இறுதி நாளான மார்­கழி 31ஆம் திகதி ஈராக்­கிய தலை­நகர் பக்­தாத்தில் அமைந்­துள்ள உல­கி­லேயே மிகப்பெரிய அமெரிக்க தூத­ரா­லயம் ஈராக்­கிய மக்­களின் பலத்த தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. 2003இல் அமெரிக்கா ஈராக்­கினுள் புகுந்து 16 ஆண்­டுகள் கழிந்த நிலை­யிலும் அமெரிக்­காவின் ஈராக்­கிய கொள்­கைக்கு பலத்த எதிர்ப்பு ஈராக்கில் இன்னும் இருப்­பதை தாக்­குதல் சம்­பவம் எடுத்துக் காட்­டு­கி­றது. ஈராக்­கிய அர­சாங்கம் இரண்டு நாடு­களில் தங்­கி­யுள்­ளது. வேடிக்கை என்­ன­வென்றால் அமெரிக்கா பரம வைரி­யாக கருதும் ஈரான் ஈராக்­கினுள் செல்­வாக்­குடன் திக­ழு­கி­றது. ஒரு­புறம் ஈராக்கை பணிய வைப்­ப­தற்கு அமெரிக்­காவின் பொரு­ளா­தார ...

Read More »

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயில் சிக்கிய பயணிகள் மீட்பு!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மாகாணத்துக்கு புத்தாண் டுக்காக சுற்றுலா சென்றிருந்த நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களை ஆஸ்திரேலிய கடற் படையினர் நேற்று மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்ற னர். ...

Read More »

அலுவலகத்திற்கு வாருங்கள் முத்தமிடலாம் என்றார் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக பொக்ஸ் நியுசின் முன்னாள் செய்தியாளரும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாh. அடுத்த வாரம் வெளியாகவுள்ள நூலொன்றில் பொக்ஸ் நியுசின் முன்னாள் செய்தியாளர் கொட்னி பிரைல் இதனை தெரிவித்துள்ளார் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் இது இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் என் அலுவலகத்திற்கு வாருங்கள் நாங்கள் முத்தமிடலாம் என டிரம்ப் தெரிவித்தார் என வெளியாகவுள்ள நூலில் பிரைல் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியுசில் பணியாற்றுபவர்களில் கவர்ச்சியானவர் என என்னை  கருதுவதாக டிரம்ப் குறிப்பிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டிரம்பின் அமெரிக்க அழகி ...

Read More »

அரசமைப்பை திருத்துங்கள்: மல்வத்து பீடம் கோரிக்கை!

நாட்டில் வளர்ச்சிக்காக புதிய அரசமைப்பு திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமென கண்டி மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார். அரசமைப்பு திருத்த பணிகளை அரசாங்கம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் தெளிவுபடுத்தபட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் மேற்படி அரசமைப்பு திருத்த பணிகளுக்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பு மிக அவசிய​மானதெனவும் தெரிவித்தார்.

Read More »

அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது!

அரசியல் தீர்வு  தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருப்பதாக தெரியவில்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெளிமாவட்டங்களில் போட்டியிடுவதுத் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும், இன்னும் அதுத் தொடர்பில் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. தனியார் வானொலியின் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கியிருக்கும் போட்டியிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது, புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டஉடனேயே அவருக்கு ஒருசில விடயங்களை நினைவுப்படுத்தியிருக்கிறோம். ஜனாதிபதிக்கு சிறுபான்மை மக்களின் ...

Read More »

பயங்கரவாதத்தின் பிடியில் சோமாலியா!

சோமாலியாவின் தலைநகர் மொகாதிஷுவில் 2019 டிசம்பர் 28 இடம்பெற்ற பெரிய ட்ரக் குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 79 பேர் கொல்லப்பட்டதுடன் 149 பேர் காயமடைந்தனர். இந்த கொடூரச்சம்பவம் அந்த நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் புத்துயிர்ப்பு பெற்றிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. 2011 ஆம் ஆண்டில் சர்வதேச படைகளினால் மொகாதிஷுவில் இருந்து விரட்டப்பட்ட அல் – ஷாபாப் என்ற அல் – கயெடாவுடன் தொடர்புடைய பயங்கரவாத இயக்கமே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் பல தற்கொலைக்குணடுத் தாக்குதல்களை நடத்திய அந்த இயக்கம் சோமாலியாவின் சில பகுதிகளை ...

Read More »

பற்றி எரியும் காட்டுத்தீ – ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய பயணம் ரத்து?

காடுகளில் தொடர்ந்து எரியும் தீயை தொடர்ந்து, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வனவிலங்குகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நாடாளுமன்றம் தெரிவித்தது. இதற்கிடையே, நியூசவுத் வேல்ஸ் பகுதியில் ...

Read More »

ஈரான் ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்கா!

ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ராக்கெட் தாக்குதலில், ஈரான் நாட்டின் ராணுவ தளபதி மற்றும் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவின் முக்கிய தளபதி ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. எண்ணெய் வளம் மிக்க ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை கொன்றுவிட்டதாக அமெரிக்கா கூறியதைத் தொடர்ந்து, ...

Read More »