ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மாகாணத்துக்கு புத்தாண் டுக்காக சுற்றுலா சென்றிருந்த நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களை ஆஸ்திரேலிய கடற் படையினர் நேற்று மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்ற னர்.
காட்டுத் தீ காரணமாக விக்டோரி யா, நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் 3 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேர் சிக்கியதாக கடற் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதில் சுமார் 1,000-த்துக்கும் அதிக மானோர் மீட்கப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal