அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக பொக்ஸ் நியுசின் முன்னாள் செய்தியாளரும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாh.
அடுத்த வாரம் வெளியாகவுள்ள நூலொன்றில் பொக்ஸ் நியுசின் முன்னாள் செய்தியாளர் கொட்னி பிரைல் இதனை தெரிவித்துள்ளார்
டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் இது இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் என் அலுவலகத்திற்கு வாருங்கள் நாங்கள் முத்தமிடலாம் என டிரம்ப் தெரிவித்தார் என வெளியாகவுள்ள நூலில் பிரைல் தெரிவித்துள்ளார்.
பொக்ஸ் நியுசில் பணியாற்றுபவர்களில் கவர்ச்சியானவர் என என்னை கருதுவதாக டிரம்ப் குறிப்பிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அமெரிக்க அழகி போட்டியில் நடுவராக பணியாற்றுவதற்கு தான் விருப்பம்வெளியிட்ட சில வாரங்களில் இந்த தொலைபேசி அழைப்பு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழைப்பினால் நான் அதிர்ச்சியடைந்தேன் என பொக்ஸ் நியுசின் முன்னாள் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இருவரும் திருமணமானவர்கள் என நினைக்கின்றேன் என பதில் அளித்துவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தேன் எனவும் அந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு மூலம் டிரம்பி;ற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள பல பெண்களின் பட்டியலில் பிரைலும் இணைந்துகொண்டுள்ளார்.