நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தையை நவுறு தடுப்பு முகாமிலிருந்து பெற்றோருடன் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சிட்னி கொண்டுவர அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மெல்போர்ன் பெடரல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த குழந்தையை அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படா நிலையில், தாய்வான் கொண்டுசெல்ல முடியும் என அவுஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது. இவ்விடயத்தை அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் தாய்வானில் குழந்தைக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் ...
Read More »செய்திமுரசு
இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் பயங்கர நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.0 என்று பதிவாகியிருப்பதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்திலேயே இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலோரம் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அங்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். “மக்கள் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டாம், உயரமான பகுதிகளுக்குச் செல்லவும் அமைதியாக இருக்கவும் பதற்றம் வேண்டாம்” என்று புவியியல், வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் த்விகோரிட்டா கர்ணாவடி உள்ளூர் தொலைக்காட்சியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். லோம்போக் தீவின் முக்கிய நகரமான மடாரம்மில் கடுமையான அதிர்வை ...
Read More »அரசியல் தீர்வை காரணம் காட்டி மக்களை ஏமாற்றுவதை ஏற்க முடியாது!
வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் குறிப்பிட்டு தமிழ் மக்களை தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் தீர்வு விடயத்திற்கு மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் நாட்டில் உள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர் கட்சி தலைவர் என்ற விடயத்தை ஒரு போதும் ...
Read More »புதைகுழியின் மீட்பு பணிகளுக்கு நிதி உதவி!
மன்னார் மனித புதைகுழியின் மீட்பு பணிகளுக்கு காணாமல் போனோர் அலுவலகம் நிதிவழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டதரணி சாலிய பீரிஸ் இதனை தெரிவித்தார். மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்கு நீதியமைச்சின் ஊடாக நிதி வழங்கப்படுகின்ற போதிலும் தொடர்ச்சியான மீட்பு பணிகளுக்கு நிதி பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த மீட்பு பணிகள் கைவிடப்படாது தொடர்ந்து முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில் காணாமல் போனோர் அலுவலகம் அதற்கான நிதியை மாதாந்தம் வழங்கும் ...
Read More »தாமதமாகக் கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமன்!
ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வருடங்களாகின்றன. எனினும் இத்தனை நாட்களாகியும் இந்த விவகாரத்தில் இன்னும் நீதியும் நியாயமும் மெளனம் காக்கிறது. ஏன், இவ்வளவு நாட்களாகியும் நீதி நிலைநாட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது என எல்லோருக்கும் எழும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது தான், இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், திரைமறைவில் குற்றவாளிகளைக் காக்கும் காய் நகர்த்தல்களும் நீதியை பெற்றுக்கொடுக்க போராடுகின்றவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் தாராளமாக இடம்பெறுவதும் அவதானிக்கப்பட்டது. இந்த ...
Read More »தொற்று ஏற்பட்டமையால் பாடசாலை இன்று மூடப்பட்டது!
அவுஸ்திரேலியாவில் ஒரே பாடசாலையைச் சேர்ந்த 182 பேருக்கு FLU தொற்று ஏற்பட்டமையைத் தொடர்ந்து பாடசாலை இன்று மூடப்பட்டது. பிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் 182 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 15 ஊழியர்களும் Flu தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 600 பேர் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் மூன்றில் ஒரு வீதமானவர்களுக்கு Flu தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஏனைய மாணவர்களுக்கும் பரவலாம் என்ற அச்சம் காரணமாக இன்று பாடசாலை மூடப்பட்டுள்ளது.
Read More »சிங்கப்பூர் ஒப்பந்தத்தால் ஏற்றுமதி வாய்ப்புக்கள் இருக்காது!
சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இலங்கைக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் மற்றும் அதனூடாக பெருமளவு வருமானம் இருக்காது என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். நாணயச்சபை மீளாய்வுக் கூட்டத்தொடரின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று மத்திய வங்கியில் நடைபெற்றது. அச்சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “இவ்வொப்பந்தத்தின் மூலம் ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள் மற்றும் அதன் மூலம் பெருமளவான ஏற்றுமதி வருமானம் என்பனவற்றை இலங்கை எதிர்பார்க்க ...
Read More »எனது மகன் மிகவும் நல்லவன்! – பின்லேடன் தாயார்
எனது மகன் மிகவும் நல்லவன், மூளை சலவையால் பயங்கரவாதி ஆனான் என்று பின்லேடன் தாயார் அலியா கூறியுள்ளார். அல்கொய்தா பயங்கரவாதி இயக்கத்தின் தலைவராக பின்லேடன் இருந்தார். உலக நாடுகளை அச்சுறுத்திய அவர் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்லேடன் தாயார் அலியா தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் வசித்து வருகிறார். பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு முதன் முறையாக ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ‘‘எனது மகன் (பின்லேடன்) மிகவும் நல்லவன். ...
Read More »முதலை கண்ணீர் வடிக்கின்றார் மஹிந்த!
“இராணுவ தலைமையகத்திற்கு சொந்தமான காணியினை சீனாவிற்கு தரைவார்த்து கொடுத்தவர்கள் இன்று இராணுவத்தினரது உரிமை தொடர்பில் முதலை கண்ணீர் வடிக்கின்றமை வேடிக்கையாகவே காணப்படுகின்றது” என தெரிவித்த பிரதியமைச்சர் அஜித் மாணப்பெரும தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேசத்திற்கு இராணுவத்தை காட்டிக் கொடுத்த பயனற்ற அரசாங்கத்தை வீட்டுக்கு விரட்டுவோம் என்று நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ஷ போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் . 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் ...
Read More »மண்விடுதலைக்காக போராடிய வீரத்தாய்!
இந்திய சுதந்திர போராட்டடத்தில் பெண்களின் பங்கு என வரும்போது நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் ஜான்சி ராணி லட்சுமிபாய் மட்டும்தான். தமிழநாட்டை சேர்ந்தவர்களுக்கு நினைவுக்கு வருவது வீரமங்கை வேலுநாச்சியாராய் இருக்கும். ஆனால் அவர்களை விட பெரிய தியாகம் செய்து ஆங்கிலேயர்களை திணறடித்த ஒரு வீரத்தமிழச்சியை பற்றி வெகுசிலரே அறிந்து வைத்திருப்பார்கள். அந்த வீரத்தமிழச்சியின் பெயர்தான் “குயிலி”. ” வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்னும் பாரதியார் கூற்றுக்கேற்றபடி பெண்ணடிமை தழைத்தோங்கிய காலத்திலேயே தன் பிறந்த மண்ணுக்காகவும், ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			