அவுஸ்திரேலியாவில் ஒரே பாடசாலையைச் சேர்ந்த 182 பேருக்கு FLU தொற்று ஏற்பட்டமையைத் தொடர்ந்து பாடசாலை இன்று மூடப்பட்டது.
பிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் 182 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 15 ஊழியர்களும் Flu தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 600 பேர் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் மூன்றில் ஒரு வீதமானவர்களுக்கு Flu தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஏனைய மாணவர்களுக்கும் பரவலாம் என்ற அச்சம் காரணமாக இன்று பாடசாலை மூடப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal