நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தையை நவுறு தடுப்பு முகாமிலிருந்து பெற்றோருடன் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சிட்னி கொண்டுவர அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மெல்போர்ன் பெடரல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த குழந்தையை அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படா நிலையில், தாய்வான் கொண்டுசெல்ல முடியும் என அவுஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது.
இவ்விடயத்தை அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் தாய்வானில் குழந்தைக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதை அவுஸ்திரேலிய அரசு நிரூபிக்கவில்லை என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து குறித்த குழந்தையை பெற்றோருடன் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதிப்பதற்கும் சிட்னி Westmead மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.