ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான  சிறிகொதாவில்  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேசத்திற்கு  இராணுவத்தை காட்டிக் கொடுத்த பயனற்ற அரசாங்கத்தை வீட்டுக்கு  விரட்டுவோம் என்று  நேற்று முன்தினம்  மஹிந்த ராஜபக்ஷ போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் . 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டு மக்கள் பயனற்ற அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவைத்ததை மஹிந்த ராஜபக்ஷ  மறந்து விட்டார்

பல அரசியல் விடயங்களை மூடி மறைப்பதற்காகவே ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுத்துள்ளது என்று குற்றம் சாட்டுபவர்கள் முன்னாள் இராணுவ தளபதியை சிறையிலடைத்து  சித்திரவதை செய்தமை மாத்திரம்  இராணுவ  காட்டிக் கொடுப்பு  இல்லையா?.

இது வரை காலமும் எந்த தேசிய வளங்களும் பிற நாடுகளுக்கு விற்கப்படவில்லை, ஆனால் பொய்யான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு தொடர்ந்து அரசியல் ரீதியில் மக்களை திசைதிருப்பி வருகின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட  தேசிய வளங்கள் பிற நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையிலே வழங்கப்பட்டுள்ளது. கடந்த  அரசாங்கத்தில் பிற நாடுகளுக்கு எமது வளங்கள் தாரை வார்க்கப்பட்டமை  தற்போது நினைவுப்படுத்த வேண்டும்.

இராணுவ தலைமையகத்திற்கு சொந்தமான  காலிமுகத்திடலில் காணப்படும் காணியினை சங்ரிலா நிறுவணத்திற்கு வழங்கியது யார்? தேசிய அரசாங்கமா? மறுபுறம்  கொழும்பு துறைமுக  அபிவிருத்தி பணிகளை சீனவிற்கு முழுமையாக வழங்கியது யார்? என்ற  விடயத்தை மறந்து தற்போது  இராணுவ உரிமை தொடர்பில் முதலை கண்ணீர் வடிக்கின்றனர்.

இவ்வாறு பல தேசிய வளங்கள் மறைமுகமாக பிற நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளது. சீன நிறுவனம் வழங்கிய தேர்தல் நிதி தொடர்பில்  மஹிந்த ராஜபக்ஷ இது வரை காலமும் எவ்வித  பதிலும் குறிப்பிடப்படவில்லை . இவரது அமைதியே  குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளது வெகுவரைவில் இவர் இதற்கு தகுந்த பதிலை குறிப்பிட வேண்டும்.

இன்று நாட்டில் காணப்படுகின்ற ஜனநாயகம் அன்று காணப்படவில்லை . வெள்ளை வேன் விவகாரம், ஊடகவியலாளர் படுகொலை,  மற்றும் காணாமலாக்கப்பட்டமை,  நீதித்துறை அவமதிக்கப்பட்டமை, தேர்தல் ஆனைக்குழு  தனது சுயாதீனமிழந்து செயற்பட்டமை போன்ற எண்ணற்ற விடயங்கள்  அன்று இடம் பெற்றது. இதன் தொடர்ச்சியை மீண்டும் நிலைநாட்டவே எதிர் தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய அரசாங்கத்தில் காணப்படுகின்ற குறைப்பாடுகளை திருத்திக் கொண்டு  எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வோம் போராட்டங்களால் ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது. ஏனெனில் தேசிய அரசாங்கம் ஜனநாயக ரீதியில் உருவாகியது. கடந்த அரசாங்கத்தின் ஊழல்கள் வெகுவிரைவில் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் அப்போது இவ்வாறான பகிரங்க போராட்டங்கள் எதும் இடம் பெறாது.” என்றார்.