செய்திமுரசு

நீராவியடியில் பிள்ளையார் ஆலயத்தை தவிர வேற்று மத அடையாளங்கள் இருக்கவில்லை!

முல்லைத்தீவு – நாயாறு நீராவியடி பகுதியில் கடந்த காலங்களில் பிள்ளையார் ஆலயம் மாத்திரம்தான் இருந்ததெனவும், வேறு எந்தவித மத அடையாளங்களும் இருக்கவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் காவல் துறை  விசாரணையில் தான் திட்டவட்டமாக தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அடிக்கல் நாட்டுவதற்காக அத்திவாரம் வெட்டியதாக, நாயற்றில் தங்கியிருக்கும் பௌத்த பிக்கு,காவல் துறையிடம் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். அதற்கமைய முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை விசாரணை செய்வதற்காக காவல் துறை நிலையம் வருமாறு, முல்லைத்தீவு காவல் துறையினர் அழைத்திருந்தனர். குறித்த ...

Read More »

வவுனியா சிறைச்சாலைக்கு ஐ. நா அதிகாரிகள் விஜயம்!

வவுனியா சிறைச்சாலைக்கு ஐ. நா. அதிகாரிகள் இன்று (07.04) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.   வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற  ஐ.நா அதிகாரிகள் 5 பேர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடனும் சந்திப்பை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 1 மணி நேரம் சிறைச்சாலைக்குள் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் குறித்த ஐ. நா அதிகாரிகள் குழு அங்கிருந்து சென்றிருந்தது. குறித்த விஜயம் தொடர்பாக ஐ. நா அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காத ஐ. நா. அதிகாரிகள் தமது விஜயம் தொடர்பாக செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் ...

Read More »

பாகிஸ்தான் பிரதமர் வீடு அருகே துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார். அவரது இந்த வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் 18 துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு படை, குற்றப்புலனாய்வு பிரிவு, வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தீ விபத்து! ஈழத் தமிழ் அகதி காயம்!

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஈழத்தைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் பாதிப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஈழ அகதி ஒருவர் காயமடைந்துள்ளார். ஈழத்தைச் சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். ஆபத்தான நிலைக்குள்ளான விக்னேஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விக்னேஷின் மருத்துவ செலவிற்காக 13,000 டொலருக்கும் அதிக பணம் புலம்பெயர் தொழிலாளர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை இடம்பெற்ற இந்த தீவிபத்தில் தொழிற்சாலையின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதாக ...

Read More »

வாள்வெட்டு -பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல்!

வாள்வெட்டு வன்முறைகள் பாரதூரமானவை அவை சமூகத்தை பீதிக்குள்ளாக்குபவை. அவற்றில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே அமையும் என சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தச் சம்பவம் கடந்த பெப்ரவரி  மாதம் 19ஆம் திகதி மாலை இடம்பெற்றது. வன்முறையை ...

Read More »

கதிர்காம ஆடிவேல் திருவிழா தொடர்பில் குழப்பம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் திருவிழா நடைபெறும் உற்சவ காலம் தொடர்பாக வேறுபட்ட தினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அதனை தீர்த்துவைத்து உரிய சரியான காலத்தை அறிவிக்குமாறு கதிர்காம பாதயாத்திரீகர்கள் சங்கம் மொனராகலை அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இரு மாதகாலத்திற்கு முன்னரே யாழ்ப்பாணத்திலிருந்து பாதயாத்திரையை மேற்கொள்ளும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைச் சங்கத்தினர் இவ்வேண்டுகோளை எழுத்து மூலம் விடுத்துள்ளனர்.   சங்கத்தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் மொனராகலை அரச அதிபருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாம் வருடாந்தம் யாழ். செல்வச்சந்நதி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 5 மாநில மக்களுக்கு காத்திருக்கும் “பரிசு”!

அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை அதிகாலை இந்த நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நேரமாற்றத்தின் மூலம் பலர் வழக்கமாக உறங்கும் நேரத்துடன் ஒரு மணி நேரம் அதிகமான தூக்கத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். வருடத்தின் ஏப்ரல் மற்றும் ஒக்டோர் மாதங்களில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நேரமாற்றம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த மாற்றத்தின் பிரகாரம், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் கன்பரா மாநில கடிகாரங்கள் ஏழாம் திகதி ...

Read More »

சீனாவின் ‘பட்டுப் பாதை’யால் படபடக்கும் நாடுகள்!

சீனாவின் பெரிய கனவுத் திட்டமான புதிய பட்டுப் பாதை திட்டத்தில் சமீபத்தில் இத்தாலி இணைந்தது. பட்டுப் பாதை திட்டத்தில் சமீபத்தில் இத்தாலி இணைந்தது. இத்திட்டத்தை சில நாடுகள் வரவேற்றபோதிலும், பல நாடுகள் படபடப்பு அடைந்திருக்கின்றன. பட்டு உற்பத்தியில் புகழ்பெற்றுத் திகழ்ந்த சீனா, அதன் வணிகத்துக்காக உருவாக்கிய பண்டைய பாதைதான், பட்டுப் பாதை. அதேபோன்று ஒரு நவீன தடத்தை அந்நாடு உருவாக்க முயல்கிறது. அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டமாரா சின், ‘தி இன்வென்ஷன் ஆப் சில்க் ரோடு’ (பட்டுப் பாதை கண்டுபிடிப்பு) என்ற நூலை ...

Read More »

104 வயது பாட்டியின் விசித்திர ஆசை!

முதியோர் விடுதியில் தங்கியிருந்த 104 வயது பாட்டியின் விசித்திர ஆசை. இங்கிலாந்தில் முதியோர் விடுதியில் தங்கியிருந்த 104 வயது பாட்டியின் விசித்திர ஆசையை நிறைவேற்றும்விதமாக, அவரை கைது செய்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் வசிப்பவர் களின் ஆசையை நிறைவேற்ற இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று முடிவு செய்தது. இதையடுத்து முதியவர்கள் தங்கள் ஆசைகளை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி, அதற்கென தொண்டு நிறுவனம் வைத்திருந்த பெட்டியில் போட்டுள்ளனர். அதில் ஆன் புரோக்கன்புரோ ...

Read More »

கேள்விக் குறியாகும் வடபுலத்து மீன்பிடியின் எதிர்காலம்!

இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன. முதலாவது, இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதும் எம்மவர்களின் வலைகளைச் சேதமாக்குவதும் பிரதானமானவை. இரண்டாவது, வெளிமாவட்ட மீனவர்கள், வடக்கில் வாடிகளை அமைத்து, மீன்பிடிப்பதன் ஊடு, உள்ளூர் மீனவர்களின் மீன்பிடியும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்றன. இவை இரண்டும் எமது அரசியல்வாதிகளின் கவனத்தை எட்டவில்லை; அதற்கான காரணங்கள் பல. இந்திய இழுவைப் படகுகளின் வருகை, மிகப்பாரிய சேதத்தை இலங்கையின் கடல் வளத்துக்கும் மீனவர்களுக்கும் ...

Read More »