கொரோனா பரவலையடுத்து எல்லைக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக பின்பற்றிவரும் ஆஸ்திரேலிய அரசு, எதிர்வரும் ஆகஸ்ட் 11ம் திகதிமுதல் வெளிநாடுவாழ் ஆஸ்திரேலியர்களுக்கான பயணக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பல்வேறு காரணங்களின் நிமித்தம் வெளிநாடுகளிலே வாழ்ந்துவரும் ஆஸ்திரேலியர்கள்( ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள்) தமது உறவினரையோ குடும்பத்தையோ பார்வையிடுவதற்கோ அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக ஆஸ்திரேலியா வந்தால், அவர்கள் மீண்டும் இங்கிருந்து வெளியே செல்வதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும் ...
Read More »செய்திமுரசு
பலமிழந்த ‘பலவான்’
தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் இரு ஜீவன்களில் ஒன்று தேனீ; மற்றையது, விவசாயி. இவ்வாறு தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும், இவை இரண்டும் தம் உழைப்பை ஒருபோதும் நிறுத்திக்கொள்வதில்லை. விவசாயி, தான் உற்பத்தி செய்கின்ற நெல்லுக்கோ, ஏனைய விவசாய விளைபொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்புகள் இன்றி, வருடாந்தம் பெரும் கஸ்டங்களையும் நட்டங்களையும் எதிர்நோக்கி வருவதுடன், தொடர்ந்தும் கடன் சுமைகளைச் சுமக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. விவசாயிகள் பலர் ஏழைகளாகவே இருக்கின்றார்கள். மழை பெய்யுமானால் தன் குடிசை ஒழுகும் எனத்தெரிந்தும், ‘இறைவா ...
Read More »தொற்றுக்குள்ளானோர் தொகையும் அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 327,019 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றையதினம் 1,820 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று 2,796 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,487 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 290,794 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 31,208 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, மேலும் 98 பேர் நேற்றைய ...
Read More »’பேரழிவை அரசாங்கம் தடுக்க வேண்டும்’
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவுக்குள் தள்ளப்படுவதைத் தடுக்க அரசாங்கம் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியது. கொரோனாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான தெளிவான உத்திகள் அரசாங்கத்திடம் இல்லை என்று தெரிகிறது, ஏனெனில், அரசாங்கத்திலுள்ள சில பொறுப்பான நபர்கள், நாட்டில் அதிகம் தொற்றும்நோயான டெல்டா மாறுபாடு பரவுவதைப் பற்றி அடித்து நொறுக்குவதை நாங்கள் காண்கிறோம் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,500 ஐத் ...
Read More »டோக்கியோவில் தங்கத்தை தன் வசமாக்கிய நீரஜ் சோப்ரா
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வென்று கொடுத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார். இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார். ஜெர்மனி வீரர் ...
Read More »எதிரியை மன்னித்தாலும் துரோகியை நாங்கள் மன்னிக்கமாட்டோம்
எழும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் சிலர் தங்களை வைத்து பணம் சம்பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. தாங்கள் இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையினை இழந்துள்ளதாகவும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று பகல் மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. இன்றைய ஊடக சந்திப்பில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி,திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் செபஸ்தியான் தேவி,மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் வேலுப்பிள்ளை பொன்மணி ஆகியோர் ...
Read More »சிவில் உடையில் பொதுமக்கள் பட்டப்பகலில் வெள்ளை வானில் கடத்தப்படுகின்றனர்
வெள்ளை வான் கலாச்சாரத்தை நினைவுபடுத்தி அச்சத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயல்கின்றது என தெரிவிப்பு சிவில் உடையில் பொதுமக்கள் காவல் துறையால் பட்டப்பகலில் கடத்தப்படுகின்றனர் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதற்கு அமைச்சர் என ஒருவர் இருக்கின்றார் என கேள்விஎழுப்பினார். இவ்வாறான கைதுகள் நாட்டில் சட்டமொழுங்கின்மை முற்றாக செயல்இழந்துள்ளதை காண்பிக்கின்றன எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு ஏன் காவல் துறை வெள்ளை வானில் வருகின்றனர் எனவும் சுமந்திரன் கேள்விஎழுப்பியுள்ளார். சிவில்உடையில் வந்து கைதுசெய்வது பிழையான முன்னுதாரணம் நாளை குற்றவாளிகளும் ...
Read More »தமிழ் இன விகிதாசாரத்தைக் குறைத்தமைக்கு சமன் பந்துலசேனவுக்கு பரிசு
அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ ஜெனகவேவ கிராம பிரிவைச் சேர்ந்த 1417 சிங்களக் குடும்பங்களை வவுனியா வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுடன் இணைத்து தமிழ் இன விகிதாசாரத்தைக் குறைத்தமைக்கான பரிசாகவே வவுனியா அரச அதிபராக இருந்த சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வழங்கப்பட்டதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற வேலையாட்களின் குறைபட்ச வேதன திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் ...
Read More »பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமில்லாதது
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்கவேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்கு தயாரான நிலையில் இல்லை. அதனால் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமலேயே இதனை மேற்கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் தெரிவித்தார். முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிககைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு ...
Read More »வடக்கு மீனவர்களின் அழிவை அரசாங்கம் வேடிக்கை பார்கின்றது
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடு காரணமாக வடக்கு மீனவர்களுக்கு மிகப்பெரிய சொத்தழிப்பு இடம்பெற்றுள்ளதாகவும், மறுபுறம் கடலட்டை பண்ணைகளை உருவாக்கி எமது கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சபையில் சுட்டிக்காட்டிய அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசாங்கம் திட்டமிட்டே வடக்கின் அழிவுகளை வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சுமத்தினார். அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர் சங்கத்தின் போராட்டங்கள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்கள் உடனடியாக சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை, சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக ...
Read More »
Eelamurasu Australia Online News Portal