சிவில் உடையில் பொதுமக்கள் பட்டப்பகலில் வெள்ளை வானில் கடத்தப்படுகின்றனர்

வெள்ளை வான் கலாச்சாரத்தை நினைவுபடுத்தி அச்சத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயல்கின்றது என தெரிவிப்பு

சிவில் உடையில் பொதுமக்கள் காவல் துறையால் பட்டப்பகலில் கடத்தப்படுகின்றனர் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதற்கு அமைச்சர் என ஒருவர் இருக்கின்றார் என கேள்விஎழுப்பினார்.

இவ்வாறான கைதுகள் நாட்டில் சட்டமொழுங்கின்மை முற்றாக செயல்இழந்துள்ளதை காண்பிக்கின்றன எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு ஏன் காவல் துறை  வெள்ளை வானில் வருகின்றனர் எனவும் சுமந்திரன் கேள்விஎழுப்பியுள்ளார்.

சிவில்உடையில் வந்து கைதுசெய்வது பிழையான முன்னுதாரணம் நாளை குற்றவாளிகளும் அதனை செய்யலாம்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏன் அவர்கள் சிவில் உடையில் வருகின்றனர், ஏன் அவர்கள் வெள்ளை வானில் வருகின்றனர், நீங்கள் வெள்ளை வான் கலாச்சாரத்தை நாட்டிற்கு நினைவுபடுத்துவதற்கு முயற்சிக்கின்றது,நாங்கள் முன்னர் செய்தோம் அதனை மீண்டும் கொண்டுவந்திருக்கின்றோம் என நாட்டிற்கு தெரிவிக்க முயல்கின்றீர்கள்,நீங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயல்கின்றீர்கள் அதற்காகவே நீங்கள் இதனை செய்கின்றீர்கள் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.