செய்திமுரசு

இறந்த பின்னரும் ஓராண்டுக்கு புரண்டு படுக்கும் மனித உடல்!

இறந்தபின் உடல்களில் நகர்வு இருக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒருவர் இறந்துவிட்டால், அவரை அமைதியாக இளைப்பாறுங்கள் என்கிறோம் (Rest in peace). ஆனால் இறந்த உடல்கள் இளைப்பாறுவதில்லை என ஆய்வு ஒன்றை மேற்கொண்ட ஆய்வாளர்கள் சிலர் கண்டறிந்துள்ளார்கள். சிட்னிக்கு அருகில் ஒரு இடத்தில், 17 மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஆய்வாளர்கள் இறந்த உடல்களை பெட்டிக்குள் வைத்து அவற்றை கமெராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்கள். உடல் அழுகும்போது, குறிப்பிடத்தக்க அளவில் உடல் நகர்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வின் முக்கிய பயன் என்னவென்றால், ...

Read More »

இங்கிலாந்தின் ஆதரவை கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம்!

ஹாங்காங்கை சீனாவிடம் இருந்து மீட்க இங்கிலாந்து உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் ‘ஒரு நாடு இரண்டு நிர்வாகம்’ என்கிற கொள்கையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வருகிறது. இந்த சூழலில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்போது சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரும் போராட்டமாக உருவெடுத்து ...

Read More »

இராணுவச் சிப்பாய் கைது! வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளை!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக சுன்னாகம் காவல் துறையினர்  தெரிவித்தனர். இந்தக் கொள்ளைச் சம்வம் இணுவில் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் சத்தம் கேட்டமையினால் வீட்டின் குடும்பத் தலைவர் கதவை திறந்துள்ளார் அப்போது முகத்தை முழுமையாக மூடியவாறு கூரிய ஆயுதங்களுடன் நின்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் குடும்பத் தலைவரை கடுமையாக தாக்கியதுடன் வீட்டுக்குள் ...

Read More »

யாழ்ப்பாணத்தில் மர்மக்கும்பல் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் தாக்குதல்களினால் ஐந்து பேர் படுகாயமடைந்ததுடன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் முகங்களை மூடியவாறு சென்ற ஆறுபேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து பொருட்களை அடித்து நொருக்கியது. அத்துடன் வீட்டிலிருந்த வயோதிபத்தம்பதியினரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் இருவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த ரவீந்திரன் வயது 70 செல்வராசாத்தி வயது 65 ...

Read More »

அதிகாரப் போட்டியின் விளைவு..!

அரச தொலைக்காட்சி ரூப­வா­ஹி­னியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  அதி­ர­டி­யாகப் பாது­காப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்­துள்ளார். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட அவ­ரு­டைய இந்தத் திடீர் நட­வ­டிக்கை ஊடக சுதந்­தி­ரத்தை அச்­சு­றுத்­த­லுக்குள்ளாக்­கி­யுள்­ளது. இதனால் பல­த­ரப்பிலிருந்து கவ­லையும் கண்­ட­னமும் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்­தினால் நடத்­தப்­ப­டு­கின்ற அல்­லது அதன் பொறுப்பிலுள்ள ஒரு நிறு­வனம் அரச சார்­பு­டை­ய­தா­கவே இருக்கும். அரச சார்­பு­டை­ய­தா­கவே செயற்­படும் என்ற பொது­வான கருத்­தியல்  நாட்டில் நீண்ட கால­மா­கவே நில­வு­கின்­றது. அரச சார்­பு­டை­ய­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற அல்­லது அர­சுக்கு ஆத­ர­வாகச் செயற்­ப­டு­கின்ற ஒரு நிறு­வனம் பாது­காப்பு அமைச்சின் கீழ் இருந்தால் ...

Read More »

அகதியை அடிமையாக வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய தம்பதி மீது குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானியரை மிட்டாய் கடையில் அடிமையாக வைத்திருந்ததாக மெல்பேர்னில் உள்ள மருத்துவர் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2015- 2017 ஆண்டுகளில் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளரை கட்டாய உழைப்பிற்கு உட்படுத்தி வர்த்தகம் செய்ததாக சய்யத் பார்ஷ்சி (46) மற்றூம் நகஹ்மே மோஸ்தாபே (45) என்ற தம்பதியனர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழுநாட்களும் 14 மணிநேரம் அவர்கள் வேலை வாங்கியதாக ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பெர்ஷிய புத்தாண்டு மற்றும் ரமலான் நோன்பின் போதும், நீண்ட நேரம் வேலைவாங்கியாதாகவும் மூன்று ...

Read More »

மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார் நளினி!

நளினிக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் நிறைவடைய உள்ளதை அடுத்து இன்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள் பரோலில் வந்து, சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அவர் மேலும் ஒருமாதம் பரோல் கேட்டு சென்னை உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் அவருக்கு ...

Read More »

பாலித தெவரப்பெரும, ஐவரை விடுதலை செய்யக் கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!

களுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி ஹட்டன் என்பீல்ட், நோனாதோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று நோனாதோட்டத்தில் ஸ்ரீ செல்வவிநாயக ஆலயத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவண்ணம் காலை 11 மணியளவில் இடம்பெற்றிருந்தது. உண்மையாக சேவை செய்யும் தலைவர்களை இணங்காண்போம், ஏமாற்று தலைவர்களை வெளியேற்றுவோம், ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று நண்பகல் ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.   காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண ...

Read More »

ரணிலா? சஜித்தா? பந்து பங்காளிக்கட்சிகளிடம்….

ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில்  அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான அடுத்தகட்ட நகர்வுகளிலும் அரசியல் பேச்சுக்களிலும் ஈடுபட்டுவருகின்றன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை  மேற்கொள்வதில் தேர்தல்  ஆணைக்குழு பிரதிநிதிகள்  ஈடுபட்டுவருகின்ற சூழலில் அரசியல் கட்சிகள்  தேர்தலுக்கு தயாராகிவருகின்றன.  ஒக்டோபர் மாத  ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே  வேட்பாளர்களை அறிவித்துவிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன ஜனாதிபதி  தேர்தலை நோக்கியான  மக்கள் கூட்டங்களை நடத்திவருகின்றன.  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ  ...

Read More »