ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானியரை மிட்டாய் கடையில் அடிமையாக வைத்திருந்ததாக மெல்பேர்னில் உள்ள மருத்துவர் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2015- 2017 ஆண்டுகளில் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளரை கட்டாய உழைப்பிற்கு உட்படுத்தி வர்த்தகம் செய்ததாக சய்யத் பார்ஷ்சி (46) மற்றூம் நகஹ்மே மோஸ்தாபே (45) என்ற தம்பதியனர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழுநாட்களும் 14 மணிநேரம் அவர்கள் வேலை வாங்கியதாக ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெர்ஷிய புத்தாண்டு மற்றும் ரமலான் நோன்பின் போதும், நீண்ட நேரம் வேலைவாங்கியாதாகவும் மூன்று நாட்கள் கடையிலேயே இருந்ததாகவும் கூறியுள்ளார் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர்.
2013ம் ஆண்டு மனைவி மற்றும் மகளுடன் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக இந்த தஞ்சக்கோரிக்கையாளர், கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மெல்பேர்ன் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.