இறந்தபின் உடல்களில் நகர்வு இருக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒருவர் இறந்துவிட்டால், அவரை அமைதியாக இளைப்பாறுங்கள் என்கிறோம் (Rest in peace). ஆனால் இறந்த உடல்கள் இளைப்பாறுவதில்லை என ஆய்வு ஒன்றை மேற்கொண்ட ஆய்வாளர்கள் சிலர் கண்டறிந்துள்ளார்கள்.
சிட்னிக்கு அருகில் ஒரு இடத்தில், 17 மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஆய்வாளர்கள் இறந்த உடல்களை பெட்டிக்குள் வைத்து அவற்றை கமெராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்கள்.
உடல் அழுகும்போது, குறிப்பிடத்தக்க அளவில் உடல் நகர்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வின் முக்கிய பயன் என்னவென்றால், பொதுவாக குற்றம் நடந்த ஒரு இடத்தில், அதாவது கொலை நடந்த ஒரு இடத்தில், தடயவியல் ஆய்வாளர்கள் வந்து பார்க்கும்போது, அந்த உடல் எந்த நிலையில் கிடக்கிறது என்பதை வைத்து அந்த நபர் எப்படி கொல்லப்பட்டார் என்பதை கணிப்பாரள்.
ஆனால் இப்போது இந்த ஆய்வில் தெரியவந்துள்ள உண்மையின்படி, அழுகும்போது உடல்கள் குறிப்பிடத்தக்க அளவில் நகர்வது தெரியவந்துள்ளதையடுத்து, இந்த கண்டுபிடிப்பு தடயவியல் ஆய்வில் பெருமளவில் உதவும் என கருதப்படுகிறது.