பிபிசி தமிழில் ரஜீபன் இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்தவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்தமை இந்தியா முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில் அந்த இடத்தில் கூடிய 2000ற்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரை பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள். பொலிஸார் வாழ்க என கோசமிட்ட அவர்கள் இனிப்புகளை வழங்கியதுடன் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலும், 27 வயது மருத்துவரின் உடல் மீட்கப்பட்ட பகுதியிலும் மலர்களை தூவினர். பெண் மருத்துவரின் பகுதியிலும் பெருமளவானவர்கள் திரண்டு இந்த கொலையை கொண்;டாடினர்,வெடிகொழுத்தினர் ...
Read More »செய்திமுரசு
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத குடியேறியாக சென்றால் பெரும் சலுகை கிடைக்குமா?
ஆஸ்திரேலிய எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் வேலை, ஓட்டுநர் உரிமம், 70,000 டாலர்கள் உதவி, மேலும் பல சலுகைகளை பெறலாம் என போலியாகப் பரப்பப்பட்ட பேஸ்புக் பதிவு 49,000 மேற்பட்டோர்களால் பகிரப்பட்டுள்ளது. “நீங்கள் வட கொரிய எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் 12 ஆண்டுகள் கடுமையான வேலையை தண்டனையாக பெற நேரிடும், ஈரானிய எல்லையை கடந்தால் காலவரையின்றி சிறையில் வைக்கப்படுவீர்கள், ஆப்கான் எல்லையை கடந்தால் நீங்கள் சுடப்படுவீர்கள்….வெனிசுலா எல்லையை கடந்தால் நீங்கள் உளவாளியாக முத்திரைக் குத்தப்படுவீர்கள்…அதுவே ஆஸ்திரேலிய எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் சலுகையை பெறுவீர்கள்,”என அப்போலி பதிவில் ...
Read More »வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35 மில்லியன் ரூபா!
கடந்த சில தினங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாக இடர் நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராய தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையின் காரணமாக நேற்று மாலை வரையில் நாடு முழுவதும் பல்லாயிர கணக்கான மக்கள் பாதிக்கட்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான நிவாரணப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »2020 உலகின் திருமணமான அழகியாக சிறிலங்கா பெண் தெரிவு!
2020 ஆம் ஆண்டின் “மிஸிஸ் வேர்ல்ட்” – “உலக அழகுத் திருமதி” என்ற பட்டத்தை சுவீகரித்தார் சிறிலங்காவைச் சேர்ந்த கரோலின் ஜூரி. அமெரிக்காவில் லொஸ்வேகொஸில் இடம்பெற்ற தெரிவில் 51 பேர் கலந்து கொண்டனர் . இதில் பங்குபற்றிய கேரோலின் குறித்த விருதை பெற்றுள்ளார். ஏற்கெனவே அவர் “ மிஸிஸ் ஸ்ரீ லங்கா” என்ற விருதுக்கும் சொந்தக்கார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதே அவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார். 35 ஆண்டுகளுக்கு பிறகு “மிஸிஸ் வேர்ல்ட்” – “உலக அழகுத் ...
Read More »2 ஆவது நாளாகவும் சட்சியமளிக்க முன்னிலையானார் பேராயர் !
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினமும் 2 ஆவது நாளாக சாட்சியமளிக்க முன்னிலையாகியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த அவர் சுமார் நான்கு மணித்தியாலம் சாட்சியமளித்திருந்தார். நேற்றைய தினம் அவர் சாட்சியமளித்தபோது , இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ...
Read More »ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமாக இவ் ஆண்டு செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாருக்கு வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழா 06.12.2019 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகின்றது. 07.12.2019 சனிக்கிழமை நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் ...
Read More »கோத்தாபயவுடன் சந்திப்பினை மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!
புதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்குமிடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என்று இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »மேற்கு ஆஸ்திரேலியாவும் கருணைக்கொலைக்கு பச்சைக்கொடி!
விக்டோரிய மாநிலத்துக்கு அடுத்ததாக மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் கருணைக்கொலைக்கு அனுமதியளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. லேபர் கட்சியின் ஆட்சிக்கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் செனட் அவை நேற்று வியாழக்கிழமை 24-11 என்ற பெரும்பான்மையுடன் கருணைக்கொலைக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்றியது. சமர்ப்பிக்கப்பட்ட சட்டமுன்வடிவின் 184 சரத்துக்களில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 55 திருத்தங்களின் பின்னர் இந்தச்சட்டம் செனட் அவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதையடுத்து இறுதி அனுமதிக்காக மீண்டும் கீழவைக்கு(House of Representatives) அனுப்பப்படும் இச்சட்டம் அடுத்த 18 மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பிரகாரம், பாரதூரமான நோய்த்தாக்கத்தின் வலியுடன் போராடிக்கொண்டு, இன்னும் ஆறு மாதங்கள்தான் உயிரோடிருப்பதற்கான மருத்துவ உத்தரவாதம் வழங்கப்பட்ட – ...
Read More »19 ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவதற்கான செயற்பாடுகள்!
நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது. 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கவேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கூறியுள்ளார். இதேபோன்றே பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேன ...
Read More »பிளாஸ்டிக் கழிவுகளால் மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழப்பு!
இரண்டு தொலைத்தூர தீவுகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் மாசுப்பாட்டில் சிக்கி மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய டாஸ்மோனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களினால் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி இந்தியப் பெருங்கடலில் உள்ள கோகேஸ் தீவுகளில் சுமார் 508,000 ஹெர்மிட் நண்டுகளும், பசுபிக் பெருங்கடலில் ஹென்டர்சன் தீவில் சுமார் 61,000 ஹெர்மிட் நண்டுகளும் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகளில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதத்தில் கோகோஸ் தீவில் பிளாஸ்டிக் பொத்தல்கள், பாதணிகள் உள்ளிட்ட 414 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியருப்பதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை ...
Read More »