புதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்குமிடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என்று இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.