பிளாஸ்டிக் கழிவுகளால் மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழப்பு!

இரண்டு தொலைத்தூர தீவுகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் மாசுப்பாட்டில் சிக்கி மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய டாஸ்மோனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.

 

அதன்படி இந்தியப் பெருங்கடலில் உள்ள கோகேஸ் தீவுகளில் சுமார் 508,000 ஹெர்மிட் நண்டுகளும், பசுபிக் பெருங்கடலில் ஹென்டர்சன் தீவில் சுமார் 61,000 ஹெர்மிட் நண்டுகளும் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகளில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் கோகோஸ் தீவில் பிளாஸ்டிக் பொத்தல்கள், பாதணிகள் உள்ளிட்ட 414 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியருப்பதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.