செய்திமுரசு

அவுஸ்திரேலியாவில் ‘தமிழ்க்குரல்’ சண்முகம் சபேசன் காலமானார்!

அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனை தளமாகக்கொண்டிருந்து இயங்கிய தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிப்பரப்புச்சேவை முதலானவற்றில் நீண்டகாலமாக ஈடுபட்டுழைத்திருக்கும் சண்முகம் சபேசன் இன்று ( 29 -05 – 2020 ) ஆம் திகதி அதிகாலை மெல்னில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது. அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து வந்தபின்னர் எனக்கு அறிமுகமாகி, நான் உறவாடி மகிழ்ந்தவர்களில் கலை, இலக்கியம், கல்வி, ஊடகம் முதலான துறைகளிலும் மற்றும் சமூகப்பணிகளிலும் ஈடுபட்ட பலரைப்பற்றி தொடர்ச்சியாக ...

Read More »

கொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும்

கடந்த வாரம், கொழும்பில் தனிப்பட்ட முறையில், நிவாரணம் வழங்க முற்பட்ட வேளை, ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி, மூன்று பெண்கள் உயிரிழந்தார்கள். இது, இலங்கையின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டுகிறது. கொழும்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊடரங்கு அமலில் இருந்தது. அன்றாடங்காய்ச்சிகளின் நிலை குறித்து, யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மரணமடைந்த மூன்று இன்னுயிர்களுக்கும், பொறுப்புச் சொல்ல வேண்டியது யார், இது யாருடைய தவறு, நிவாரணத்தை வழங்கியவர்களின் தவறா, நிவாரணத்தைப் பெறச் சென்றவர்களின் தவறா, முண்டியடித்து நிவாரணத்துக்குச் செல்வதற்கான நிலைமையை ஏற்படுத்திய அரசாங்கத்தின் தவறா? இலங்கை ...

Read More »

சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று (29) வாக்குமூலம் ஒன்றை பெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்றால் மூவர் உயிரிழந்தனரென, தவறான தகவலை வெளியிட்டமை குறித்தே, இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது. தலாஹேனவில் அமைந்துள்ள  சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் வைத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர்  வாக்குமூலத்தை பெறவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

ரணில் – சஜித் தலைமையில் தனித்தனி கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்குழு கூட்டங்கள் இன்று (29) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம், கோட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் முன்னால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

ஈரான் மக்களை கொதித்தெழுச் செய்த ஆணவக் கொலை

ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்டது அந்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 14 வயதான ரோமினா அஷ்ரப்பின் மரணம் தான் ஈரானில் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரோமினா அஷ்ரப்பின் காதலை ஏற்க முடியாத அவர் தந்தை அவரை ஆணவ கொலை செய்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடக்கு மேற்கு பகுதியில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்த ஆணவ கொலைத் தொடர்பாக ரோமினா அஷ்ரப்பின் தந்தை ரேசா அஷ்ரப் கைது செய்யப்பட்டுள்ளார். ரேசா அஷ்ரப் ...

Read More »

ஈழத்தை  பூர்வீகமாகக் கொண்ட வைத்தியர் – வட அயர்லாந்தைச் சேர்ந்த தாதிக்கும் திருமணம்

பிரிட்டன் நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் செயின்ட் தாமஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் வைத்தியராக பணிபுரிபவர் ஈழத்தை  பூர்வீகமாகக் கொண்ட அன்னாலன் நவரத்தினம். இதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிபவர் ஜான் டிப்பிங். இவர் வட அயர்லாந்தைச் சேர்ந்தவர். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இரு வீட்டாரிடமும் திருமணத்துக்கு சம்மதம் பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட்மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் கரோனா பிரச்சினையால் கடந்த மார்ச் 23-ம் திகதி முதல் பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு உள்ளது. எனவே, இருவருடைய பெற்றோரும் வருவதில் சிக்கல் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பூட்டப்பட்ட அறையில் இரு இளைஞர்கள்! படுக்கையறையில் தந்தையின் சடலம்!

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பூட்டப்பட்டிருந்த குடியிருப்பு ஒன்றில் இருந்து அரை நிர்வாண கோலத்தில் இரு பதின்ம வயதினரையும், படுக்கையறையில் அவர்களின் தந்தையின் சடலத்தையும் காவல் துறையினர் மீட்டுள்ளனர். பிரிஸ்பேன் நகரில் உள்ள அந்த குடியிருப்பில் இருந்து வாய்விட்டு கதறும் சத்தம் தொடர்ந்து கேட்டுவந்ததையடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்க தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறை , பூட்டப்பட்டிருந்த குடியிருப்பின் உள்ளே புகுந்து பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளனர். ஒரு அறையில் அரை நிர்வாண கோலத்தில் 17 மற்றும் 19 வயது இளைஞர்கள் பூட்டி ...

Read More »

கொரோனாவை எதிர்க்கும் திறன் கபசுர குடிநீருக்கு உண்டு!

கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் கபசுர குடிநீருக்கு உண்டு என சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைமை இயக்குனர் டாக்டர் கே.கனகவல்லி தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் 18 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த ...

Read More »

சீன நாடாளுமன்றத்தில் நிறைவேறியது புதிய பாதுகாப்பு சட்டமூலம்

சீன நாடாளுமன்றம் ஹொங்கொங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஹொங்கொங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகும். அங்கே வெளியுறவு, இராணுவம் ஆகிய இரு துறைகளையும் சீனா கட்டுப்படுத்தும். ஏனைய அனைத்துத் துறைகளையும் ஹொங்கொங் அரசே நிர்வகிக்கும். 70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹொங்கொங் பல தசாப்த காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1997 ஆம் ஆண்டு ஹொங்கொங்கை, இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அந்தநாள் முதல் இன்று வரை ஹொங்கொங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ...

Read More »

மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

ஜுன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் 8ஆவது நாளாக இன்று (28)இடம்பெற்றது.

Read More »