செய்திமுரசு

ஆஸ்திரேலிய மக்கள் மௌன அஞ்சலி!

முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான நேற்று(11) உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். முதல் உலகப் போர் என்றழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பெரும்போரினில் உலகம் தழுவிய அளவில் பல நாடுகள் பங்கேற்ற போதிலும், பெரும்பாலும் இந்தப் போர் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இதில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு பக்கமும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ...

Read More »

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள்!- விசாரணைக்கு 3 நீதிபதிகள்!

சிறிலங்கா  ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களை விசாரணை செய்வதற்கு பிரதம நீதியரசர் உட்பட மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டடுள்ளனர். அதன்படி பிரதம நீதியரசர் நளின் பெரேரா, உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார். இந்நிலையிலேயே ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்படமையானது ...

Read More »

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் மனுத்தாக்கல்!

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்படமையானது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு எனவும், அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு எனவும் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மனுக்கள் உட்பட்டோர் மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம்!

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாத காலமாக பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திய ஸ்ட்ராபெர்ரி விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களாக, ஸ்ட்ராபெர்ரி பற்றிய அச்சம் பொதுமக்களிடம் அதிகமாகிக்கொண்டே சென்றது. பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் ஆஸிதிரேலிய அரசும் திணறியது. பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்ட காரணம், அந்தப் பழங்களில் காணப்பட்ட ஊசி தான். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அந்நாட்டில் விற்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருப்பது கண்டு பொதுமக்கள் அச்சம் கொண்டனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது கடந்த செப்டம்பர் ...

Read More »

நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும்!

மங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி மங்களவினால்தான் ரணில் இயக்கப்படுகிறார் என்ற தொனிப்பட ‘வண்ணத்திப் பூச்சிகளின் அணியென்று’ அவர்களை விமர்சித்தார். வண்ணாத்திப் பூச்சிகள் என்பது தன்னினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கும். அதற்கு மங்கள சமரவீர தான் மைத்திரியைப் போல ‘ஒர் அட்டையல்ல’ என்று கூறியுள்ளார். பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர்; சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி சுமார் இருபத்தையாயிரம் பேர் கூடியிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்தே மைத்திரி ரணிலை மேற்கண்டவாறு விமர்சித்தார்.அக்கூட்டத்துக்கு அவர்கள் வைத்த ...

Read More »

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிக்கை!-தமிழக அரசு சிபாரிசை மத்திய அரசு நிராகரித்தது!

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும்படி கேட்ட தமிழக அரசின் சிபாரிசை மத்திய உள்துறை ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்ப மறுத்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறார்கள். நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசும் அவர்களை விடுவிப்பதற்கு சம்மதம் தெரிவித்து மத்திய அரசிடம் இது சம்பந்தமாக சிபாரிசு செய்தது. ...

Read More »

தனியயார் காணியில் இராணுவம் விவசாய செய்கை!

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாக வவுனியா நகரசபை மற்றும் வவனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர்களிடம் காணி உரிமையாளர் முறையிட்டதையடுத்து குறித்த காணியை அவர்கள் பார்வையிட்டுள்ளனர். யுத்த காலத்தில் 5 ஏக்கர் வயல் காணியை பாதுகாப்புக் காரணங்களுக்காக தமது கட்டுப்பாட்டில் எடுப்பதாகவும் அதற்காகா 25 ஆயிரம் ரூபா தருவதாகவும் தெரிவித்து உரிமையாளரிடம் இருந்து குறித்த காணியை இராணுவம் அபகரித்ததாக தெரிவித்த நகரசபை தலைவர் தற்போது குறித்த காணியில் இராணுவத்தினர் நெல் விதைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். ...

Read More »

மஹிந்தவின் அடுத்த நகர்வு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.   கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் முன்னிலையி‍லேயே அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். இதேவளை நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஆஸ்திரேலிய ஆஸ்பத்திரியில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்!

ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ராயல் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரித்தனர். பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு ஜாங்மோ. இந்த பெண்ணுக்கு 15 மாதங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஒரு தொண்டு ...

Read More »

தீவிர வலதுசாரி நாடாகும் பிரேசில்!

பிரேசிலின் புதிய அதிபராக 2019 தொடக்கத்தில் பதவியேற்கிறார் ஜெய்ர் பொல்சொனாரோ. ஒரு ஜனநாயக நாட்டில் பதவிக்கு வந்த வலதுசாரிகளிலேயே இவர்தான் அதிதீவிரமானவராக இப்போதைக்குக் கருதப்படுகிறார். பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஹங்கேரியைப் பின்பற்றி பிரேசிலிய மக்களும் வலதுசாரித் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பொல்சொனாரோவை, ‘பிரேசிலின் டிரம்ப்’ என்றே அழைக்கின்றனர். இதில் உண்மையும் இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதார்தேவைப் போல இவரும், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வன்முறைதான் கை கொடுக்கும் என்று நம்புகிறார். அதிபர் தேர்தல் முடிவு வெளியான உடனேயே பிரேசில் நாட்டு ராணுவம் ...

Read More »