செய்திமுரசு

குற்றச்செயல்மயமான அரசியலும் அரசியல்மயமான குற்றச்செயல்களும்!

அரசியலுக்கும் குற்றச்செயல்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நாமெல்லோரும் நீண்டகாலமாகவே பேசிவந்திருக்கின்றோம். இலங்கை அண்மைய சில தசாப்தங்களாக எதிர்நோக்கிவருகின்ற எரியும் பிரச்சினைகளில் இது முக்கியமான ஒன்று. ஆனால், அரசியலில் இருந்து குற்றச்செயல்களையோ அல்லது குற்றச்செயல்களில் இருந்து அரசியலையோ விடுவிக்க எம்மால் எதையும் செய்யமுடியவில்லை. தொடர்ந்து அதைப்பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருக்க மாத்திரமே எம்மால் முடிகிறது. குறிப்பாக, எமது பிராந்திய நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்று முடியும்போதெல்லாம் ‘ மக்கள் பிரதிநிதிகள் ‘ என்று தெரிவுசெய்யப்படுகின்றவர்களின் பின்னணி பற்றி பேசுவது வழக்கமாகும். பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருப்பவர்களில் எத்தனை பேர் மக்கள் பிரதிநிதிகள் ...

Read More »

பார்வையற்ற தமிழ் அகதியை ஓன்பது வருடங்களாக தடுத்துவைத்துள்ளது அவுஸ்திரேலியா!

பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியொருவரை ஒன்பது வருடங்களாக  அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருப்பதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள  ஐநா குறிப்பிட்ட தமிழ் அகதியை உடனடியாக விடுதலை  செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் குழுவொன்று இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ஒரு தசாப்தகாலமாக சிறையில் வாடும்  கண்பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியை அவுஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது. ஒன்பது வருடங்களாக நபர் ஒருவரை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அவுஸ்திரேலியா  சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என ஐநா தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட ...

Read More »

சிறப்பு தொழுகை நடத்த ஹபீஸ் சயீத்துக்கு அனுமதி மறுப்பு!

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் கடாபி மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது அரசு மறுத்து விட்டது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 166 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களுக்கு பின்னணியாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். ஜமாத்-உத்-தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. மேலும் அவரது பெயர் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருக்கிறார். ஹபீஸ் சயீத் கடந்த சில வருடங்களாக ரம்ஜான் ...

Read More »

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று  நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ்சை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாட்டிங்காம் நகரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்கிறது. ஆரோன் பிஞ்ச் , டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் விவரம் ...

Read More »

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவு!

ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற செயற்பாடுகளின் விளைவே இன்று அனைத்து தரப்பினருக்கும் தாக்கம் செலுத்துகின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்றும் குறிப்பிட்டார்.   விஜயராம மாவத்தையில் உள்ள  எதிர்க்கட்சி  தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஒரு தனி நபரை  இலக்கு வைத்து நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவில்லை. ஐக்கிய தேசிய கட்சி ...

Read More »

இராஜினாமா செய்தால் எனக்கு தூதுவர் பதவியை வழங்க சிறிசேன முன்வந்தார் !

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளிற்கு  எனது தவறுகளே காரணம் என நான் ஒப்புக்கொண்டால் எனக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியை வழங்குவதற்கு  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்தார் என  காவல் துறை மா அதிபர் பூஜித்ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில்  சாட்சியமளிக்கையில் குண்டுவெடிப்புகளிற்கு எனது தவறே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டு நான் பதவியை இராஜினாமா செய்தால் எனக்கு  தூதுவர் பதவியை வழங்க சிறிசேன முன்வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். குண்டுவெடிப்புகளிற்கு எனது தவறே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டால் ...

Read More »

மூடிய அறையில் இரகசிய வாக்குமூலமளித்த நாலக்க!

ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இரண்டாம் விசாரணை நாடாளுமன்ற குழுவரை 3 இல் இடம்பெற்றது. இவ் விசாரணைக்காக பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் காவல் துறை மா அதிபர் நாலக்க டி சில்வா வரவழைக்கப்பட்டிருந்தார். சக்கர நாற்காலியில் அவர் வாக்குமூலமளிக்க வந்திருந்தார். அவருடனான விசாரணையில் பல்வேறு விடயங்கள் ஊடகங்கள் முன்னிலையில் தன்னால் தெரிவிக்க முடியாது என அவர் ஆரம்பத்தில் தெரிவித்ததை அடுத்து குறித்த சில கேள்விகளுக்கு ...

Read More »

நேட்டோ- ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும்!

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உக்ரைன் இணையும் என புதிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார். உக்ரைனின் அதிபராக பதவியேற்ற விளாமிடிர் செலன்ஸ்கி, தனது முதல் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக பெல்ஜியம் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிரசல்ஸ் நகரில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், நேட்டோ ராணுவ கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது நாடு உறுப்பினராக இணையும் என இன்னும் நம்புவதாக தெரிவித்தார். மேலும் அண்டை நாடான ரஷியாவுடன் பேச்சுவார்த்தை ...

Read More »

இன வன்முறைகளை தூண்டுபவர்களுக்கு எதிராக குற்றவியல் திருத்த சட்டம்!

பல்வேறு இன மக்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வைராக்கிய கூற்றுகளை தெரிவிக்கும் நபர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் நிலையான புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது.   சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்த்தில் இதற்கான அனுமதி வழங்கியுள்ளது. குற்றவியல் தண்டனை சட்டத்தில் நீதி குறியீடுகள் மற்றும் குற்ற செயல் வழக்கு கட்டளை குறியீடுகளில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரிவு அரசாங்கத்தை கேட்டுக் ...

Read More »

அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம்!

பேரினவாதம் என்பது ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை அடக்கியொடுக்குவதற்கான சக்தியாக இருந்துவந்துள்ள அதேவேளை, அதனை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது நாட்டின் அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம் மாறியிருக்கிறது என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். இதுவிடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது : தற்போது நாட்டின் அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம் மாறியிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரசாங்கங்களை மாற்றியமைப்பதிலும், தீர்மானம் மேற்கொள்வதிலும் இந்தப் பேரினவாதத்தின் ஆதிக்கம் எப்போதும் ...

Read More »