இன வன்முறைகளை தூண்டுபவர்களுக்கு எதிராக குற்றவியல் திருத்த சட்டம்!

பல்வேறு இன மக்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வைராக்கிய கூற்றுகளை தெரிவிக்கும் நபர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் நிலையான புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது.

 

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்த்தில் இதற்கான அனுமதி வழங்கியுள்ளது.

குற்றவியல் தண்டனை சட்டத்தில் நீதி குறியீடுகள் மற்றும் குற்ற செயல் வழக்கு கட்டளை குறியீடுகளில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரிவு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கமைவாக இந்த குற்ற சம்பவம் தொடர்பில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு தண்டப்பணம் அல்லது சிறைதண்டனை விதிக்கக் கூடிய வகையில்  குற்றவியல் திருத்த சட்டம் மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதிகள் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.