நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 177 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்று காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளார். 90 வயதுகளிலுள்ள மூதாட்டி ஒருவரே இவ்வாறு மரணமடைந்ததாகவும் இவருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப்பின்னணியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை ஆகக்குறைந்தது மேலும் 4 வாரங்களால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் வாழ்பவர்களுக்கான முடக்கநிலை ஆகக்குறைந்தது ஆகஸ்ட் 28ம் திகதிவரை நீடிக்கப்படுவதாக Premier ...
Read More »செய்திமுரசு
இடிந்துபோன மோடியின் தேசியவாதம்
நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு ‘விஸ்வகுரு’ அல்லது ‘உலகிற்கு மாஸ்டர்’ ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 ற்கும் அதிகமான நாடுகளில் இருந்து இந்தியா உதவிகளைப் பெற்றிருப்பதாகவும் இது மோடியின் வெளியுறவுக் ...
Read More »கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சையில் ஒட்சிசனின் தேவை அதிகரித்துள்ளது
கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சையில் ஒட்சிசனின் தேவை அதிகரித்துள்ளதுடன், மருத்துவமனைகள் முழு திறனை நெருங்கி வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதுடன், ஒட்சிசனின் தேவை பெரும்பாலும் அதிகரித்துள்ளது. இதேவேளை நாங்கள் திட்டமிட்டிருந்த மருத்துவமனை திறன் கிட்டத்தட்ட நிரம்பி விட்டதாகவும் சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்திலுள்ள கொரோனா தொற்றாளர்களிடையே முன்னெடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் 20% முதல் 30% வரை டெல்டா கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் உள்ளது. ஏனைய பகுதிகளிலும் இந்நிலையே காணப்படும் ...
Read More »அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை
அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தீர்மானங்களை இன்றைய தினம் எடுத்துள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவைர்களுடனான கலந்துரையாடலின் பின்ன இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவ்ர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று மாலை வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், மற்றும் ...
Read More »ஒலிம்பிக்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றும் விளையாட மறுத்த அமெரிக்க வீராங்கனை
கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்த நிலையில், மனஅழுத்தம் காரணமாக சிமோன் பைல்ஸ் இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒருபக்கம் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மறுபக்கம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். இவர் பெண்களுக்கான ஆல்-ரவுண்ட் பிரிவில் சக வீராங்கனைகள் மூன்று பேருடன் தகுதிச்சுற்றில் ...
Read More »பசில் ஒரு மந்திரவாதியில்லை ?
அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்திருக்கிறது. இதை அகமுரண் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மேற்கு நாடுகளோடு சுதாகரித்துக்கொள்ளும் ஓர் உத்தி என்று எடுத்துக் கொள்வதா ? கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளைச் சமாளிக்கும் விதத்தில் சில நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தாவிட்டால் அல்லது அகற்றாவிட்டால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது என்ற தொனிப்பட எச்சரிக்கும் ஒரு ...
Read More »மனைவியைப் போல வேடமிட்டு விமானப் பயணத்துக்கு முயன்ற கொரோனா நோயாளி
இந்தோனேசியா முழுவதும் கடுமையான கொரோனா தடுப்பு விதிகள் நடைமுறையில் உள்ள சூழலில், ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை சுமார் 50,000 ஆக பதிவாகி வருகிறது. இந்தோனேசியாவில் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர் மனைவியின் பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றி பெண் போல பர்தா போட்டு பயணிக்க முயன்றுள்ளார். அவரது முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பயணத்தின் போது, அந்த நபர் பாத்ரூம் சென்றுள்ளார். அப்போது வெளியே வந்தபோது பர்தா போட்டு வந்துள்ளார். பெண் உடையில் சென்ற நபர் எப்படி ஆண் ...
Read More »புதிய அரசியல் அமைப்பு – கட்சிகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சி
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக புதிய மக்கள் அமைப்பை உருவாக்குவதற்காக எதிர்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மேலும் சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி கூறியிருந்தது. இதனடிப்படையில், முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்கள் மற்றும் லங்கா சமசமாஜக் கடசியின் தலைவர்கள் இடையில் நேற்று சமசமாஜக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. முன்னிலை சோசலிசக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டதாக லங்கா சமசமாஜக் கட்சியின் ...
Read More »அவுஸ்திரேலியாவில் தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் பலி!
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெல்பன் Dandenong பிரதேச வீடொன்றில் இந்த சம்பவம் நேற்று 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் ரித்திஷ் கிருஷ்ணநீதன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டின் Gas heater மூலம் ஏற்பட்ட தீ, பற்றி எரிந்து வேகமாக வீட்டின் ஏனைய இடங்களுக்கும் பரவியிருக்கிறது. ரித்திஷ் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் போகமுடியாதளவுக்கு வீட்டினை தீ சூழ்ந்து எரிந்திருக்கிறது. ரித்திஷின் தாயார் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மகனை காப்பாற்றுவதற்கு முயற்சிசெய்துள்ளார். அவரது ...
Read More »அத்தியாவசியப்பொருட்கள் விலைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் 66.4 வீதமான மக்கள் அதிருப்தி
இலங்கையில் ஏற்பட்ட கொரோனா ; வைரஸ் பரவல் ; காரணமாக சுகாதாரநலன், வாழ்வாதாரம், கல்வி, சமூக உறவுகள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்களிலும் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் இந்த நெருக்கடி கையாளப்பட்ட விதம் ஆகியவை தொடர்பில் பொதுமக்களின் கண்ணோட்டத்தை அறிந்துகொள்ளும் நோக்கிலான ஆய்வொன்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது பல்வேறு விடயப்பரப்புக்களின் கீழ் கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்தைப் பயன்படுத்தி, நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள முக்கிய நான்கு இனச்சமூகங்களையும் கிராமப்புற, நகர்ப்புற சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய 1000 பேரை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ;அதன்மூலம் பெறப்பட்ட விபரங்களை அடிப்படையாகக்கொண்டு ...
Read More »
Eelamurasu Australia Online News Portal