கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சையில் ஒட்சிசனின் தேவை அதிகரித்துள்ளது

கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சையில் ஒட்சிசனின் தேவை அதிகரித்துள்ளதுடன், மருத்துவமனைகள் முழு திறனை நெருங்கி வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதுடன், ஒட்சிசனின் தேவை பெரும்பாலும் அதிகரித்துள்ளது. இதேவேளை நாங்கள் திட்டமிட்டிருந்த மருத்துவமனை திறன் கிட்டத்தட்ட நிரம்பி விட்டதாகவும் சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்திலுள்ள கொரோனா தொற்றாளர்களிடையே முன்னெடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் 20% முதல் 30% வரை டெல்டா கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் உள்ளது. ஏனைய பகுதிகளிலும் இந்நிலையே காணப்படும் .

இதேவேளை இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்ம குணரத்ன கடந்த வாரம் ஒட்சிசன் தேவையை எடுத்துரைத்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு சுமார் 200 கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்படுகினறனர் . அவர்களில் 100 பேருக்கு ஒட்சிசன் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.