மனைவியைப் போல வேடமிட்டு விமானப் பயணத்துக்கு முயன்ற கொரோனா நோயாளி

இந்தோனேசியா முழுவதும் கடுமையான கொரோனா தடுப்பு விதிகள் நடைமுறையில் உள்ள சூழலில், ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை சுமார் 50,000 ஆக பதிவாகி வருகிறது.

இந்தோனேசியாவில் கொரோனா பரிசோதனையில் தொற்று  உறுதியானவர் மனைவியின் பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றி பெண் போல பர்தா போட்டு பயணிக்க முயன்றுள்ளார். அவரது முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப் பயணத்தின் போது, அந்த நபர் பாத்ரூம் சென்றுள்ளார். அப்போது வெளியே வந்தபோது பர்தா போட்டு வந்துள்ளார். பெண் உடையில் சென்ற நபர் எப்படி ஆண் உடையில் வெளிவருகிறார் என்று கவனித்த பணிப்பெண் ஒருவர் இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின் விமானத்தை விட்டு கீழிறங்கும் போது அவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அந்த நபரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு நோய் தொற்று உறுதியானது. இதை அடுத்து அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தப் பிறகு அவரை காவலில் வைத்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா முழுவதும் கடுமையான கொரோனா தடுப்பு விதிகள் நடைமுறையில் உள்ள சூழலில், ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை சுமார் 50,000 ஆக பதிவாகி வருகிறது.