செய்திமுரசு

கரையொதுங்கிய படகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 5 மனித உடல்களும் 2 மனித தலைகளும்!

வடகொரியாவிலிருந்து ஜப்பானிற்கு வந்த படகிலிருந்து ஐந்து உடல்களை மீட்டுள்ளதாக ஜப்பானின் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் சடோ தீவில் கரையொதுங்கிய மரப்படகிலிருந்து  இந்த உடல்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஐந்து உடல்களையும் இரண்டு தலைகளையும் மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட படகில் கொரிய மொழியில் எழுதப்பட்ட இலக்கங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட தீவில் கடந்த மாதத்தில் மர்ம படகு கரையொதுங்குவது இது இரண்டாவது தடவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More »

நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. மத்திய வங்கி இதற்கான விதிகளை அடக்கிய திருத்தச் சட்டமூலமொன்றை நிதியமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது. தற்போது பணவைப்பை பொறுப்பேற்கும் நிதி நிறுவனங்களை மாத்திரமே இலங்கை மத்திய வங்கியின் சட்டத்தின் கீழ் ஒழுங்குறுத்த முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நுண்நிதி நிறுவனங்கள் அடங்கலாக கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குறுத்தும் நோக்கில் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டமூலத்தை நிதியமைச்சு, அமைச்சரவையில் சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர், இது ...

Read More »

யுத்தத்தில் கையை இழந்த தாய்! காணாமல் ஆக்கப்பட்ட தந்தை! வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவி !

இறுதி யுத்தத்தில் தந்தையைத் தொலைத்துவிட்டுச் சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதித்துள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி. வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி  இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில்   3A  சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையைத் தொலைத்துக் காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையைத் தேடிக்கொண்டிருக்கும் குறித்த ...

Read More »

நியூஸிலாந்துக்கு எதிராக 467 ஓட்டங்களை குவித்த ஆஸி.!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296 ஓட்டங்களினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ...

Read More »

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி காவல் துறை அதிபராக நுவன் வேத சிங்க!

பிரதி காவல் துறை  மா அதிபர் நுவன் வேதசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி காவல் துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

கழன்று போகும் கடிவாளம்!

மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தின் சாதனை என்று கூறத்தக்க விடயம், 19 ஆவது திருத்தச் சட்டம் தான். அந்தத் திருத்தச் சட்டத்தை, இல்லாமல் ஒழிப்பதே, இப்போதைய அரசாங்கத்தின் முதல் வேலைத் திட்டமாக இருக்கிறது. இது ஒன்றும், புதிய அரசாங்கத்தின் இரகசியமான வேலைத் திட்டம் அல்ல; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் வெளிப்படையாகவே இதனைக் கூறி வருகிறார்கள். 19 ஆவது திருத்தச் சட்டம் ஆபத்தானது என்றும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனை இல்லாமல் ஒழிப்பது தான், முதல் வேலையாக இருக்கும் என்றும் அவர்கள் ...

Read More »

‘பிரபலமான பதின்ம பருவ நபர் மலாலா’: ஐ.நா அறிவிப்பு

கடந்த பத்தாண்டுகளில் பதின்ம வயதில் உலகப் புகழ்பெற்றவர் (most famous teenager) என்ற பட்டத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை “பத்தாண்டு கால மதிப்பீடு” (Decade in Review) என்ற பெயரில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம்(2010), சிரிய உள்நாட்டுப்போர் துவக்கம் (2011), பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள் (2012), எபோலா வைரஸ் தாக்குதல் (2014), காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது (2015) ஆகியவற்றை ...

Read More »

47 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!

ஆஸ்திரேலியாவின் Operation Sovereign Borders (OSB) எனும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் கடந்த 1 நவம்பர் முதல் 30 நவம்பர் வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. அக்குறிப்பின் படி, இந்த ஒரு மாதக் காலத்தில் 47 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் மருத்துவ உதவிக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றதாக பல ஆண்டுகளாக நவுரு மற்றும் பப்பு நியூ கினியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள். இம்மாத(டிசம்பர்) தொடக்கத்தில், ...

Read More »

துரித கதியில் பிரெக்ஸிட் விவகாரத்தை முடித்துவிட விரும்பும் ஜோன்ஸனின் முன்னாலுள்ள வேகத்தடைகள்!

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதையடுத்து தற்போதைய காலக்கெடுவில் (2020 ஜனவரி 31) அன்று அல்லது அதற்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பெரும்பாலும் வெளியேறும் என்பது இப்போது நிச்சயமாகிவிட்டது. முன்னாள் பிரதமர் தெரேசா மே தனது பிரெக்ஸிட் உடன்படிக்கைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்குத் திரும்பத் திரும்ப மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து ஜோன்ஸன் பிரதமராக வந்தார். ஜோன்ஸன் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதியதொரு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டு புதிய தேர்தலை நடத்தினார். அவரது கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் ...

Read More »

இஸ்ரேல்: லிக்குட் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு அபார வெற்றி!

இஸ்ரேல் நாட்டில் ஆட்சி அமைக்க முடியாமல் நாடாளுமன்றத்துக்கு மறுதேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும்கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு வெற்றி பெற்றார். இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த இரண்டாம் முறை தேர்தலில்கூட நேதன்யாகுவின் லிக்குட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது. நீலம் வெள்ளை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ...

Read More »