நியூஸிலாந்துக்கு எதிராக 467 ஓட்டங்களை குவித்த ஆஸி.!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296 ஓட்டங்களினால் வெற்றிபெற்றிருந்தது.

இந் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியினர் 155.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 467 ஓட்டங்களை குவித்துள்ளனர்.

அந்த அணி சார்பாக ஜோ பேர்ன்ஸ் டக்கவுட்டுடனும், டேவிட் வோர்னர் 41 ஓட்டங்களையும் லபுஸ்சென்ஸ் 63 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 85 ஓட்டங்களையும், மெத்தியூ வெட் 38 ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் 114 ஓட்டங்களையும், டிம் பெயின் 79 ஓட்டங்களையும், மிட்செல் ஸ்டாக் ஒரு ஓட்டத்தையும், பேட் கம்மின்ஸ் டக்கவுட்டுடனும், நெதன் லியோன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், ஜேம்ஸ் பேட்டின்சன் 14 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

நியூஸிலாந்து அணி சார்பில் நெயில் வாக்னர் 4 விக்கெட்டுக்களையும், டீம் சவுதி 3 விக்கெட்டுக்களையும், கிரேண்ட் ஹோம் 2 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நியூஸிலாந்து அணி இன்றைய இரண்டாம் நாள் முடிவில் 18 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 44 ஓட்டங்களை குவித்துள்ளது.