அவுஸ்ரேலியாவின் தேசிய தினத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 26 ஆம் திகதி அவுஸ்ரேலியாவின தேசிய தினம் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் சிட்னி, மெல்போர்ன், பேர்த் உள்ளிட்ட நகரங்களில் தேசிய தினத்தை மே 8ம் திகதி அல்லது மார்ச் முதலாம் திகதிக்கு மாற்றுமாறு கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. எனினும் இதனை ஏற்க மறுத்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தேசிய தினத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என அறிவித்துள்ளார். பிரித்தானிய ஆட்சிக் காவலத்தில் குற்றங்களைச் செய்தவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அந்த வகையில் 1788 ஜனவரி ...
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலிய ஓபன்: பீட்சாம்ராஸ் சாதனையை நடால் முறியடிப்பாரா?
அவுஸ்ரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ரபெல் நடால்- ரோஜர் பெடரர் இன்று (29) மோதுகிறார்கள், இதில் பீட்சாம்ராஸ் சாதனையை ரபெல் நடால் முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் உலகின் 9-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), 17-வது வரிசையில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள். நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) மற்றும் இரண்டாம் நிலை ...
Read More »வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு- முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை
வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு நீரியியல் கொள்கையினை வகுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்ளூர் நிபுணர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கு.28.01.2017 காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி. வி . விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் அங்கு உரையாற்றுகையில், வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ...
Read More »சிட்னியில், புலிக்குப் போக்குக் காட்டிய வாத்து!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்றில், புலி ஒன்றுக்குப் போக்குக் காட்டிய வாத்தின் காணொளி இணையதளத்தில் பரபரப்பாகப் பரவி வருகிறது. ஒரு கட்டத்தில், தன்னைத் தின்னும் வெறியுடன் அலையும் அந்தப் புலிக்குப் பின்னால் கூட வாத்து நீந்தியபடி வந்தது. புலி தன்னைக் கவனிக்கவில்லை என்றதும் ‘வா வா’ என்பது போலத் தனது இறகுகளைப் படபடவென அடித்தது. சுமார் பத்து நிமிட முயற்சி வெற்றியளிக்காத நிலையில் குளத்தில் இருந்து வெளியேறியது புலி.
Read More »அவுஸ்ரேலிய அரச விருது பெறும் தமிழ் விஞ்ஞானி!
அணு மருத்துவம் மற்றும் உயிரியல், தொழில் நிறுவனங்கள், மற்றும் சமூகத்திற்கு துறைகளில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சேவை; மற்றும் சமூக சேவை ஆற்றியமைக்காக பேராசிரியர் விஜய் குமார் Order of Australia AM விருது பெற்றிருக்கிறார்.
Read More »5 மணி நேரம் போராடி போட்டிக்குள் நுழைந்தார் நடால்
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் 4 மணி நேரம் 56 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார் நடால். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிசின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், 15-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார். முதல் செட்டை நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் டிமிட்ரோ ஆக்ரோஷமான விளையாடினார். இதனால் 2-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றினார். 3-வது செட்டில் இருவரும் ...
Read More »அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – மகுடம் யாருக்கு?
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சகோதரிகள் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், வீனஸ் வில்லியம்சும் மோதுகிறார்கள். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் சகோதரிகள் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், வீனஸ் வில்லியம்சும் மோதுகிறார்கள். இருவரும் இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் சந்தித்த 8 ஆட்டங்களில் 6-ல் செரீனாவே வென்று ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். அக்கா வீனசை விட தங்கை செரீனா தான் தற்போது வலுவான வீராங்கனையாக திகழ்கிறார். ஆனாலும் 36 ...
Read More »இந்திய வம்சாவளியினருக்கு அவுஸ்ரேலிய அரசின் மிக உயரிய விருது
அவுஸ்ரேலியா நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் மூன்று பேருக்கு அந்நாட்டு அரசின் மிக உயரிய விருது வழங்கப்படுகிறது. அவுஸ்ரேலிய நாட்டில் சிறப்பான முறையில் சமூகத்துக்கு தொண்டாற்றிவரும் பொதுமக்களுக்கு ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதுப் பதக்கம் அளிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியா நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டுக்கான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் தேர்வாகியுள்ளனர். மருத்துவ துறையில் சிறப்பான சேவை ஆற்றியமைக்காக புருஷோத்தம் சவ்ரிக்கார், நரம்பியல் கதிர்வீச்சு, கல்வித்துறை மற்றும் மருத்துவம்சார்ந்த பிறதுறைகளில் ...
Read More »நாவற்குழி சிங்கள குடியேற்றத்திற்கு மாவை அனுமதி!
சர்ச்சைக்குரிய நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களிற்கு வீடுகளை ஒதுக்கி வழங்க மாவை சேனாதிராசா சம்மதித்திருந்தமை அம்பலமாகியுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே அங்கு குடியமர்ந்துள்ள 200 இற்கும் அதிகமான தமிழ் குடும்பங்கள் வீடுகளோ காணிகளோ இல்லாதுள்ள நிலையில் அவர்களிற்கு வீடு காணி வழங்குவதானால் சிங்கள குடியேற்றவாசிகளிற்கும் அவை வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனை தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகளிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவை சேனாதிராசா இதற்கு சம்மதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களில் ...
Read More »வவுனியா உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவில் போராட்டம்!
மூன்று அம்ச கோரிக்கையினை முன்வைத்து நான்காவது நாளாக உண்ணா நோன்பிருந்து போராடிவரும் உறவுகளுடன் கைகோர்க்கும் வகையில்நேற்று(26) பெர்த் நகரில் அமைந்திருக்கும் இலங்கை துணை தூதரகத்திற்கு முன்னாள் அமைதி வழி போராட்டம் ஒன்று மேற்கு அவுஸ்ரேலியா தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			