செய்திமுரசு

சிறிலங்கா மீண்டும் குடும்ப ஆட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருகிறது!

சிறிலங்கா  மீண்டும் குடும்ப ஆட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருகிறது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று புதன்கிழமை காலை கிண்ணியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அமைச்சர்களின் பிரத்தியேக உத்தியகத்தர்களாக குடும்ப உறுப்பினர்களை நியமிக்க முடியாது, அமைச்சுக்களின் திணைக்களங்களின் உயர் பதவிகளுக்கு அமைச்சர்கள் தமக்கு நெருங்கியவர்களை நியமிக்க முடியாது என ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் இது ராஜபக்ஷ குடும்பத்துக்கு மட்டும் பொருந்தாது என்பதை அவர் வெளியில் சொல்லவில்லை. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாதளவு வெப்ப நிலை உயர்வு!

அவுஸ்திரேலியாவின் சராசரி வெப்ப நிலையானது 40.9 செல்சியஸ் ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியா வரலாற்றிலேயே பதிவான ஆகக் கூடுதலான வெப்ப நிலை இது எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிதுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் வெப்ப நிலையானது 40.3 ஆக பதிவாகியிருந்தது. இந் நிலையிலேயே நேற்றைய தினம் 40.9 என்ற ஆகக்கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் வறட்சி மற்றும் காட்டுத் தீ ஆகியவையே இந்த வெப்ப நிலை ...

Read More »

காணாமல் போனவர்களை மீளக் கொண்டுவர முடியாது என்கிறார் கோத்தா!

யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில்  6000 பேர் வரையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இதேபோன்றே புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல்போனோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினாலேயே தீர்வு காணமுடியாதுள்ளது. மரணச்சான்றிதழ்களை வழங்குவதுடன் அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்களை  வழங்க முடியும்.  இதனைவிட அவர்களை  மீள  கொண்டுவர முடியாது  என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் தொடர்பில் படிப்படியாக நடவடிக்கை  எடுக்கப்படும். மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில்   பரிசீலிக்க  குழுவொன்று அமைக்கப்படும்.  இதேபோன்றே ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் சாதுரியமாக உயிர் தப்பிய சிறுவன்!

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுதீயில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள 12 வயது சிறுவன் ஒருவர் தனது நாயுடன் அவரது சகோதரனின் ஜீப் வண்டியில் தப்பித்துச்சென்றுள்ளார். இதனால் உயிர் ஆபத்தில் இருந்து சிறுவனும் அவரது நாயும் சுமார் 128 கிலோ மீற்றர் தொலைவில் ,வீதியின் அருகில் இருந்து எவ்வித காயங்களும் இன்றி காவல் துறையினர் மீட்டுள்ளதாக தெரிவித்தனர். சிறுவனிற்கு வாகனம் ஒட்டும் திறன் இருந்ததால் அவர் பாரிய விபத்தில் இருந்து தப்பித்துக்கொண்டதாக சிறுவனை மீட்ட காவல் துறையினர்  தெரிவித்தனர். அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உண்டான காட்டுத் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமரான ஹோல்ட் காணாமல் போன தினம்: 17.12.1967

ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமராக ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் 1966-1967 காலப்பகுதியில் பதவி வகித்து வந்தவர். இவர் விக்டோரிய மாநிலத்தில் செவியட் கடலில் 1967-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் இதேநாளில் குளிக்கும்போது திடீரென காணாமல் போனார். அவர் இறந்ததாக ஆஸ்திரேலியா அரசு டிசம்பர் 19-ந் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஹோல்ட் மொத்தம் 32 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். இவருடைய பதவிக்காலத்தில் வியட்நாம் போர் முக்கிய வெளிநாட்டு கொள்கை பிரச்சினையாக இருந்தது. இப்போரில் கூடுதலான இராணுவத்தினரை ஈடுபட வைத்தார். இவருடைய ...

Read More »

நியூஸிலாந்து காணாமல்போன இருவரை தேடும் பணி இடை நிறுத்தம்!

சீரற்ற காலநிலைக் காரணமாக நியூஸிலாந்தின், வைட் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி காணாமல்போன இருவரை தேடும் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தின்போது குறித்த தீவில் 47 பேர் இருந்துள்ளதுடன், அவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் வைத்தியசாலையில் தீக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையிலேயே வைட் தீவில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பின்போது காணாமல்போன இருவரை தேடும் நடவடிக்கை ...

Read More »

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை!

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999-ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி 2008 வரை ஆட்சி செய்தவர் பர்வேஸ் முஷரப். இவர் தனது ஆட்சியின்போது 2007-ஆம் ஆண்டு, நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார்.  அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், மூத்த நீதிபதிகளை சிறையில் அடைத்தார். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக, முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, ...

Read More »

சுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்­தப்­பட்­டமை புனை­யப்­பட்ட கதையாம்!­

“சுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு முற்­றிலும் புனை­யப்­பட்­ட­தொரு சம்­ப­வ­ம் என்­பது தற்­போது தெளி­வாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது   என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ இலங்­கைக்­கான சுவிட்­சர்­லாந்து தூதுவர் ஹான்ஸ்­பீட்டர் மொக்­கிடம்  தெரி­வித்தார். இலங்­கைக்­கான சுவிட்­சர்­லாந்து தூதுவர் ஹான்ஸ்­பீட்டர் மொக் நேற்று  முற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில்   ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­பக்ஷ வை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.   இதன்­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு குறிப்­பி­ட்­டுள்­ளார். அண்­மையில் ஜனா­தி­பதி பெற்­றுக்­கொண்ட தேர்தல் வெற்றி தொடர்பில் தனதும் தமது அர­சாங்­கத்தின் சார்­பிலும் வாழ்த்­துக்­களை இதன்­போது  தெரி­வித்த தூதுவர், “நான் அனைத்து ...

Read More »

பொதுத் தேர்தலுக்கான செலவு 20 பில்லியன் ரூபாவை தாண்டக்கூடும்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சுமார் 20 பில்லியன் ரூபா தாண்டக்கூடும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத் தேர்தலில் 6 ஆயிரம் வேட்பாளர்கள் என்றும் தேர்தல்கள் செலவீனங்களை குறைக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More »

குளியல் தொட்டியில் அழுகிய நிலையில் மொடல் அழகியின் உடல்!

அவுஸ்திரேலியாவில் மொடல் அழகியின் உடல் 8 மாதமாக வீட்டின் குளியல் தொட்டியில் கிடந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. சாரா கேட் (40) என்ற முன்னாள் மொடல் அழகியின் உடல் கடந்தாண்டு ஜனவரி மாதம் அழுகிய நிலையில் அவர் வீட்டில் இருந்த குளியல் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் சாரா குளியல் தொட்டியில் கண்டெடுக்கப்படுவதற்கு எட்டு மாதங்களுக்கே முன்னரே கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் விக்டோரியாவை சேர்ந்த 52 வயது நபரை பொலிசார் ...

Read More »