ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமரான ஹோல்ட் காணாமல் போன தினம்: 17.12.1967

ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமராக ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் 1966-1967 காலப்பகுதியில் பதவி வகித்து வந்தவர். இவர் விக்டோரிய மாநிலத்தில் செவியட் கடலில் 1967-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் இதேநாளில் குளிக்கும்போது திடீரென காணாமல் போனார். அவர் இறந்ததாக ஆஸ்திரேலியா அரசு டிசம்பர் 19-ந் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஹோல்ட் மொத்தம் 32 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். இவருடைய பதவிக்காலத்தில் வியட்நாம் போர் முக்கிய வெளிநாட்டு கொள்கை பிரச்சினையாக இருந்தது. இப்போரில் கூடுதலான இராணுவத்தினரை ஈடுபட வைத்தார்.

இவருடைய மரணம் இதுவரையில் மர்மமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்றே நம்புகின்றனர். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 2005-ம் ஆண்டு மரண விசாரணை அதிகாரியினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஹோல்ட் கடலில் மூழ்கியே இறந்தார் என அறிவிக்கப்பட்டது.