செய்திமுரசு

ஞனாசார தேரரின் விடுதலை சந்தேகத்தை எழுப்புகின்றது!

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த காலங்களில் இனமோதல்களுக்கு காரணமாக இருந்த ஞானசார தேரரை ஜனாதிபதி விடுவிக்க எடுத்த தீர்மானம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.   உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் விரோத பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது. பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்கள் கழிந்த பின்னர் இனவாதிகள் குருணாகல் மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ...

Read More »

முஸ்லிம் அமைச்சர்களின் அதிர்ச்சி முடிவு!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் மற்றும் பிரதியமைச்சர்களும் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்று வரும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

அரசாங்கம் பரிசீலித்து பார்க்க வேண்டும்!

அமைச்சர் ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மைதா என்பதை அரசாங்கம் பரிசீலித்து பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு பரிசீலித்து பார்க்காமல் தட்டி கழிக்க கூடாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று யாழில் நடைபெற்றது. இதன் பின்னர் அமைச்சர் ரிசாட் பதீயூதின் மீதான குற்றச்சாட்டுக்களும் அவரை பதவி நீக்க கோருகின்ற போராட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலவச Wi-Fi பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் இலவச Wi-Fi பயன்படுத்துபவர்களை பொலிஸார் கண்காணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலவச இணைய வசதியை (WiFi) வழங்கும் McDonald’s உணவகம், Westfield பல்பொருள் அங்காடி மற்றும் Apple Stores ஆகியவற்றில் WiFi வசதியை பயன்படுத்துபவர்களின் விபரங்களை அவுஸ்திரேலிய புலனாய்வுப்பிரிவினர் கண்காணிக்கலாம் என கூறப்படுகின்றது. பாதுகாக்கப்பட்ட தொடர்பாடல் (encryption technology) செயலிகளின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக்கேட்பது உட்பட இணைய பாதுகாப்பு தொடர்பில் பல புதிய கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவான புதிய சட்டத்தின்படி மேற்படி கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Morrison அரசின் காலத்தில் ...

Read More »

நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதிகள்! செய்திகளை மறுக்கும் அமைச்சர்!

அவுஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருந்த 20 இலங்கையர்கள் அண்மையில் நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில் குறித்த அகதிகள் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்படாமலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் Peter Dutton இதனை தெரிவித்துள்ளார். படகில் வந்த 20 இலங்கையர்களை கிறிஸ்மஸ் தீவு முகாமுக்கு கொண்டுவந்து சில நாட்கள் தடுத்துவைத்திருந்த பின்னர் இலங்கைக்கு திருப்பியனுப்பியதாக முன்னர் வெளிவந்த தகவல்களை அமைச்சர் முற்றாக மறுத்தார். அகதிகள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டுவரப்படாமலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார். பிறிஸ்பனில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது ...

Read More »

சீனா உருவாக்கும் ‘நிழ‌ற்படை’

ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு நகரங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சக்தி வாய்ந்த பல்வேறு நாடுகள், தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளன. சீனாவும் அதற்கு விதிவிலக்கானது அல்ல என்பதை, நிரூபித்திருக்கிறது. அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கடந்த 14ஆம் திகதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். ‘ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பயணத்தை மேற்கொண்டார் என்று கூறப்பட்டாலும், அந்தப் பயணத்தின் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு 208 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுக்கு ஆப்கானிஸ்தான் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணியின் முன்கள வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை விரைவில் இழந்தனர். ...

Read More »

புதிய பாதையின் அவசியம்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட  குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணி­யிலும் கொழும்பு துறை­முக நகர நிர்­மா­ணத்தின் பின்­ன­ணி­யிலும் நாட்டின் மீது அக்­க­றையும் கரி­ச­னையும் கொண்­டுள்ள சர்­வ­தேச நாடு­களின் கவ­னத்தைத் தமிழ் அர­சியல் தரப்­பினர் தமக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி காய் நகர்த்­தல்­களை மேற்­கொள்ள வேண்டும். இதன் ஊடாக தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்துக் கொள்­வ­தற்­கான புதிய வழி­மு­றை­யொன்றில் பயணம் செய்­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும். இத்­த­கைய முயற்­சிக்­கான சூழலும் நாட்டின் நிலை­மை­களும் எவ்­வா­றி­ருக்­கின்­றன என்று நோக்­கு­வது முக்­கியம். கொழும்­பிலும் மட்­டக்­க­ளப்­பிலும் தொடர்ச்­சி­யாகத் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை ...

Read More »

மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் – கனிமொழி

எந்த மொழிக்கும் எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் என்று எம்.பி. கனிமொழி கூறி உள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று காலை தூத்துக்குடி செல்லும் முன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- எந்த காலத்திலும் எந்த மொழிக்கும் எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை தி.மு.க. எதிர்க்கும். அது இந்தியாக இருந்தாலும் தி.மு.க. எதிர்க்கும். நாடாளுமன்றத்திலும் தி.மு.க. எதிர்க்கும். நாடாளுமன்றத்தில் எத்தனை பேர் இருந்தாலும் ஒரு எம்.பி.யாக இருந்தாலும் ...

Read More »

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் கிராம மக்களால் சிறப்பு பொங்கல் வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றது . இந்த பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து பௌத்த பிக்கு ஒருவர் குருகந்த ரஜமஹா விகாரை எனும் பெயரில் விகாரை ஒன்றை அமைத்துள்ளதுடன் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்றினையும் அமைத்துள்ளார் . சர்சைக்குரிய இந்த ஆலயம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 6ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஆலயத்துக்கு சென்ற மக்களுக்கு மீண்டும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து இன்று கிராம மக்கள் இணைந்து பொங்கல் பொங்கி ...

Read More »