செய்திமுரசு

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.அதற்கமைய யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று வியாழக்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, ‘ஐநாவே இலங்கை அரசின் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார். நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் (வயது 42). நியூசிலாந்து ரக்பி வாரீயர்ஸ் அணியில் வீரராக இருந்த இவர் ரக்பி உலக கோப்பை விளையாட்டுகளில் விளையாடி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரக்பி விளையாட்டுகளில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற ரோவான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளரான ஹன்னா என்ற பெண்ணை ...

Read More »

ஆஸ்திரேலியாவில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் – 4 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் சிறிய ரக பயிற்சி விமானம் மற்றொரு விமானத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பலியாகினர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர் நகரில் தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி மையம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். இந்த விமானம் மங்களூர் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறை சட்டவிரோதமானதா?

அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சிறைவைக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறை, கொடூரமானது, மனிதத்தன்மையற்றது, சர்வதேச சட்டதின் அடிப்படையில் சட்டவிரோதமானது எனக் கூறியுள்ளார் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர். ஆஸ்திரேலியாவின் சுதந்திர நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ வில்கிக்கு வழக்கறிஞர் அலுவலகம் எழுதிய கடிதத்தில், பப்பு நியூ கினியா மற்றும் நவுருவில் உள்ள முகாம்களில் உடல் மற்றும் பாலியல் வன்முறை அவ்வப்போது நிகழக்கூடிய ஆபத்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவ்விஷயங்கள் சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றும் வழக்கு தொடர்பாக கூடுதல் விசாரணைக்கான ‘சூழ்நிலைக் ...

Read More »

‘அதிகாரப் பரவலாக்கலானது முழு நாட்டுக்கும் அமுலாக வேண்டும்’!

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தாம் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பின்போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. தீர்வுத்திட்டம் தொடர்பில் பெரும்பான்மை மக்கள் சரியான திசையில் வழிநடத்தப்பட வேண்டும் என இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் வசந்த சேனாநாயக்க!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆஜராகி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க வாக்குமூலம் அளிக்கவுள்ளார் அத்துடன் வெளிவிவகார அமைச்சின் மூன்று அதிகாரிகளும் அதே நாளில் வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதே வேளை நேற்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆஜராகியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வாக்குமூலங்களும் பெற ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வீதியில் திடீரென தீப்பற்றிய கார்: மூன்று குழந்தைகளுடன் தந்தை பலி!

அவுஸ்திரேலியாவில், பிரிஸ்பேன் நகரை அண்மித்த வீதியொன்றில் திடீரென காரொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று காலை சுமார் ; 8.00 மணியளவிலேயே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐந்து பேர் காருக்குள் இருந்துள்ள நிலையிலேயே குறித்தக் கார் தீப்பற்றியுள்ளது. இந்நிலையில் காருக்குள் இருந்த பெண்ணொருவரின் அலறல் சத்தம் கேட்டு வீதியில் சென்றுக்கொண்டிருந்தவர்கள் காரை நோக்கி ஓடி சென்று காருக்குள்ளிருந்த குறித்தப் பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அதன்போது, அவன் தான் என் மீது மண்ணெண்ணையை ஊற்றினான் என குறித்தப் பெண் கத்தியதாக அப்பெண்ணை மீட்டவர் தெரிவித்துள்ளார். மேலும், ...

Read More »

கரோனா வைரஸ் பாதிப்பு: சீன இயக்குநர் குடும்பத்தோடு பலி !

மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹானில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 காய்ச்சல் கண்டறியப்பட்டது. கடந்த சில மாதங்களில் ஹுபெய் மாகாணம் மட்டுமன்றி சீனா முழுவதும் இந்தக் காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு சீனாவில் மட்டும் 2004 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார அமைப்பின் தகவலின்படி சுமார் 74,185 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 11,977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14,376 பேர் குணமடைந்து மருத்துவமனை திரும்பியுள்ளனர். ...

Read More »

தமிழைக் காத்த தமிழ் தாத்தா!

பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தலே தம் வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருந்த உ.வே.சா., பாரதியாரால் “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்” என்று பாராட்டப்பட்டார். இன்று (பிப்ரவரி 19-ந் திகதி) தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் பிறந்த நாள். தமிழின் சிறப்பை உலகறியச் செய்து தொன்மையான தமிழ் இலக்கியங்கள் பலவற்றை மீட்டுக் கொடுத்தவர் உ.வே.சா. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்தார். 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சில் கொண்டு வந்தார். பிற்காலத்தில் தமிழின் தூதுவராக இருந்து சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து பதிப்பித்து ‘தமிழ் தாத்தா’ என்று பட்டப்பெயர் பெற்றார். ...

Read More »

லாரியஸ் விருதை வென்றார் சச்சின்!

விளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது. அவ்வகையில் 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. இதில்  2019-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலா முன் கார் பந்தயத்தில் 6 முறை சாம்பியன் ...

Read More »