உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் வசந்த சேனாநாயக்க!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆஜராகி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க வாக்குமூலம் அளிக்கவுள்ளார்

அத்துடன் வெளிவிவகார அமைச்சின் மூன்று அதிகாரிகளும் அதே நாளில் வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை நேற்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆஜராகியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வாக்குமூலங்களும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுதது அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செப்டம்பர் 21 ஆம் திகதி ஐவர் அடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.