வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.அதற்கமைய யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று வியாழக்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.Protest-2-5-640x480

இதன்போது, ‘ஐநாவே இலங்கை அரசின் நேர்மையீனம் உனக்கு இன்னும் புரியவில்லையா, இலங்கையை தாமதமின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்து’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.இறுதி யுத்ததத்திற்கு முன்னரும் யுத்தத்தின்போதும் இலங்கை அரசிடம் பலர் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.