செய்திமுரசு

4 மாணவர்களின் உயிரிழப்பு – விசாரணை செய்ய மூவர் கொண்ட குழு நியமனம்!

திருகோணமலை – கோமரங்கடவல மதவாச்சி குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி சுற்றுலா மேற்கொண்ட போது நீரில் மூழ்கி குறித்த 4 மாணவர்களும் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் பதுளை ஹாலி எல பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல காவல் துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், மாணவர்களின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள மூவர் ...

Read More »

மனித எச்சங்கள் விவகாரம்: காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் போராட்டத்துக்கு அழைப்பு!

மன்னாரில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் இன்று (சனிக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் குறித்த போராட்டமானது மன்னார் நகர மண்டபத்தின முன் ஆரம்பமாகி மன்னார் சதொச மனித புதைகுழிக்கு அருகில் ஒன்று கூடலுடன் நிறைவு பெறும். இந்த ...

Read More »

ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகும் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்துக்கு…..?

இலங்கையினால் இணை அனுசரணை வழங்கப்பட்டு ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 31/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து நாட்டுக்குப் பாதகமாக அமையக் கூடிய மேலும் தடைகள் விதிக்கப்படக் கூடிய சாத்தியம் குறித்து கவலைப்படுவதாகக் கூறியிருக்கும் இலங்கை தேசிய சமாதானப் பேரவை , தேசிய நல்லிணக்கத்தின் மீது தொடர்ந்தும் பற்றுறுதி கொண்டிருப்பதை வெளிக்காட்டக் கூடியதாக மாற்று பயணத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா இது தொடர்பாக ...

Read More »

தீ மூட்டப்பட்ட காரிலிருந்து மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயும் பலி!

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்னில் கணவர் காருக்கு தீ மூட்டிய சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ள அதேவேளை தனது மகளிற்கும் முன்னாள் ரக்பி வீரரான கணவரிற்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டிருந்ததாக உயிரிழந்துள்ள பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ரக்பி வீரர் ரொவான் பக்ஸ்டர் தனது குடும்பத்தவர்களை காருடன் தீமூட்டி எரித்தவேளை காயங்களுடன் மீட்கப்பட்ட ஹனா பக்ஸ்டெர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ரொவான் பக்ஸ்டரும் மூன்று பிள்ளைகளும் நேற்று உயிரிழந்த நிலையில் இன்று ஹனா ;பக்ஸ்டர் ;காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த ...

Read More »

விபத்தில் இருவர் பலி : அவுஸ்திரேலியாவில் சம்பவம்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் புகையிரதம்  தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு , பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 160 பயணிகளுடன் அதிக வேகத்தில் பயணித்த குறித்த ரயிலானது தண்டவாளத்தில் இருந்து விலகி சில மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையிலேயே குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர்  உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சரியான கொள்கை அடிப்படையிலான தீர்மானம் எடுப்பதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு தாம் இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நேற்று நாடாளுமன்ற குழு அறையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமேதா ஜி. ஜயசேன, வைத்தியர் சுதர்ஷனி பெர்ணாண்டுபுல்லே, வைத்தியர் துசிதா விஜேமான்ன, ஸ்ரீயானி விஜேவிக்ரம, ரோஹிணி குமாரி விஜேரத்ன, விஜயகலா ...

Read More »

அமெரிக்கத் தடையும் போலியான தேசப்பற்றும்!

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, அவரது நெருங்கிய குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ள விவகாரம், இலங்கை அரசிய‌ற் பரப்பில், கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்புக் குறித்து, இரண்டு விதமான நோக்கு நிலைகள் அரசியல் பரப்பில் காணப்படுகின்றன. தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவருமே, அமெரிக்காவின் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்கள். அதேவேளை, மற்றொரு புறத்தில், சிங்கள அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி, மனோ கணேசன், திகாம்பரம் போன்ற தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட அரசியல் தலைவர்கள், இந்த முடிவை எதிர்த்திருக்கிறார்கள் அல்லது, கேள்விக்குட்படுத்தி ...

Read More »

முகாம்களிலும் வாக்களிப்பு நிலையங்கள்!

முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தமது வாக்குகளை, தாம் தங்கியிருக்கும் இடங்களிலேயே அளிப்பதற்கான வாக்களிப்பு நிலையங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமைக்கப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த வாக்களிப்பு நிலையங்கள் நாடாளுமன்றச் சட்டத்தில் உள்ள விதிகளுக்கு அமைய அமைக்கப்படுமென்றும் தெரிவித்தார். இன்று  வவுனியாவில் நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தின நிகழ்வில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எந்தவொரு நபருக்கும் 2 இடங்களில் வாக்களிக்க முடியாது. 2 இடங்களில் பதிவும் செய்ய வாய்ப்பும் இல்லை.  மிகவும் அரிதாக இரண்டு இடங்களில் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் ...

Read More »

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருமணத்தை தள்ளிவைத்த மருத்துவர் கொரோனா தாக்கி பலி!

சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது திருமணத்தை தள்ளிவைத்த மருத்துவர் வைரஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு 2 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 75 ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் பாதிப்பு ...

Read More »

காட்டுத் தீ தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்படும்!

அவுஸ்திரேலியோ மற்றும் தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீ தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 33 பேர் உயிரிழந்ததுடன் பல சொத்துக்களும் உயிரினங்களும் தீயில் கருகி நாசமாகின. இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்பத்தப்படும் என தற்போது அறிவித்துள்ளார் அத்தோடு கடந்த ஆண்டு செம்டெம்பர் மாதம் ஆரம்பித்த காட்டுத் தீ பல்வேறு பகுதிகளில் அழிவுளை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்களின் ...

Read More »