திருகோணமலை – கோமரங்கடவல மதவாச்சி குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வி சுற்றுலா மேற்கொண்ட போது நீரில் மூழ்கி குறித்த 4 மாணவர்களும் உயிரிழந்தனர்.
இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் பதுளை ஹாலி எல பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், மாணவர்களின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal