செய்திமுரசு

20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்?

20வது திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வாக்களித்துள்ளனர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நசீர் அஹமட் பைசல் ஹாசிம் எச்எம்எம் ஹாரீஸ் எம் எஸ் தௌபீக் முஸ்லீம் தேசிய கூட்டணியின் ஏஏஎஸ்எம் ரஹீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இசாக் ரஹ்மான். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரவிந்த குமார் ஆகியோர் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்

Read More »

ஜனநாயகத்தை கொலை செய்கின்றது அரசாங்கம்

சிறிலங்கா  அரசாங்கம் தேசத்தின் ஜனநாயகத்தை 20வது திருத்தம் மூலம் கொலைசெய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா டுவிட்டரில் சற்று முன்னர் பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் தங்களை ஆட்சிக்குகொண்டுவந்தவர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களின் விருப்பத்திற்கு எதிராக அரசாங்கம் ஏதேச்சதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது என ஹர்சா டி சில்வா பதிவிட்டுள்ளார்.

Read More »

விடுதலைப் புலிகள் மீதான தடை; பிரித்தானிய மேல்முறையீட்டு ஆணைய தீர்ப்பின் அடுத்த கட்டம் என்ன?

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை கடந்த ஆண்டு நீட்டித்த பிரிட்டன் உள்துறையின் நடவடிக்கை தவறானது என்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் உள்துறைச் செயலாளருக்கு எதிராக ஆறுமுகம் உள்ளிட்ட மனுதாரர்கள் மேல்முறையீட்டு ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை கடந்த ஜூலை விசாரித்த நீதிபதிகள் எலிசபெத் லெய்ங், ரிச்சர் விட்டாம், ஃபிலிப் நெல்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது. அதில் “விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவை நீட்டிக்க, உள்துறை கவனத்தில் ...

Read More »

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத்தொடர் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையுமா?

நியூயோர்க்கில்உள்ள ஐ.நா. பொதுச்சபையில், கடந்த 13ம் திகதி, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 2021ஆம் ஆண்டு முதல் மூன்று வருடங்களிற்கு அங்கத்துவத்திற்கான பதினைந்து வெற்றிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மனித உரிமைகளை மோசமாக மீறும் நாடுகள் சிலவும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விடயத்திற்கு விபரமாக செல்லும் முன், ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பத்தேழு நாடுகளிற்கான அங்கத்துவம் எப்படியாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வடிப்படையில் – ஆசிய – பசுபிக்குக்கு (13) பதின்மூன்று நாடுகளும், ஆபிரிக்காவிற்கு (13) பதின்மூன்று நாடுகளும், ...

Read More »

ஆஸ்திரேலியா: விக்டோரியா மாநிலத்தில், தொடர்ந்து ஆறாவது நாளாக நோய்த்தொற்றுச் சம்பவங்கள் குறைந்தன!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், தொடர்ந்து ஆறாவது நாளாக மிகக் குறைவானவர்களிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கிருமிப்பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த மாநிலத் தலைநகர் மெல்பர்னில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேரிடம் மட்டுமே புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. அதற்கு முந்திய நாள், இருவரிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. புதிதாகக் கிருமித்தொற்று உறுதியானவர்களின் 14-நாள் சராசரி விகிதம், 6.2-க்குக் குறைந்துள்ளது. அந்த விகிதம் 5-க்குக் குறைந்தால், சமூக அளவிலான பரவல் துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாகப் பொருள்படும். அவ்வாறு நேர்ந்தால், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தேவையான அளவுக்குக் ...

Read More »

சீனாவில் உள்ள வங்கியில் டிரம்ப் கணக்கு வைத்துள்ளார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்திருப்பது தெரியவந்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது. சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து அதிபர் டிரம்ப் விமர்சித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போரை தூண்டி விட்டார். இந்த நிலையில் டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் தொடர்பான ஆவணத்தை பெற்ற நியூயார்க் டைம்ஸ், அவருக்கு சீனா வங்கியில் கணக்கு உள்ளது என்பதை வெளியிட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டதாக ...

Read More »

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து தாதிமார் சங்கம் அச்சம்

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அகில இலங்கை தாதிமார் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது. தாதிமார் உட்பட சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயத்தில் சுகாதார அமைச்சும் மாகாண சுகாதார அதிகாரிகளும் தலையிடவில்லை என அகில இலங்கை தாதிமார் சங்கத்தின் எஸ்.பி மடிவட்ட தெரிவித்துள்ளார் .கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் எடுக்கவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதாரதரப்பினருக்கு வேண்டுகோள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

ராஜபக்ச குடும்பத்தை பழிவாங்குவதற்காவே 19 வது திருத்தம் கொண்டுவரப்பட்டதாம்!

பத்தொன்பதாவது திருத்தத்தில் காணப்படும் தவறுகளை சரிசெய்வதற்காகவே 20 வது திருத்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். 19வது திருத்தம் மூலம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டை மீள வலுப்படுத்தவே 20வது திருத்தத்தை கொண்டுவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 20வது திருத்தம் மூலம் அரசாங்கம் விசேட மாற்றங்கள் எதனையும் கொண்டுவரப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களுக்குள் 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச சிறிசேனவே இதனை விரும்பவில்லை என ...

Read More »

நியூசிலாந்து தேர்தலில் ஜசிந்தா ஆர்டன் பெற்ற மகத்தான வெற்றியின் பின்னணி

அக்டோபர் 17ல் நடைபெற்ற நியூசிலாந்து பாராளுமன்றத் தேர்தலிலே லேபர் கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கின்றது. நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கான தேர்தல், செப்டெம்பர் 19ல் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனாத் தொற்றுப் பரவல் ஏற்பட்டதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொற்றின் வீரியம் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டது. இருந்தாலும் நிச்சயமற்ற ஒரு சூழ்நிலை நிலவியது. அதனால் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது பொருத்தமில்லை. வாக்களிப்பதற்கான இயல்பான சூழல் மக்களுக்குக் கிடைக்காது என்னும் அபிப்பிராயம் கட்சிகளிடையே ஏற்பட்டது. அதனாலேயே தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் நியூசிலாந்தில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதலாவது ...

Read More »

ஆஸ்திரேலியாவும் பங்கேற்பதால் சீனாவுக்கு நெருக்கடி

இந்த ஆண்டு நடக்கும் ‘மலபார்’ கூட்டு கடற்படை பயிற்சியில் ஆஸ்திரேலியா பங்கேற்கும் என இந்தியா அறிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் இணைந்து ‘மலபார்’ கூட்டு கடற்படை பயிற்சியை ஆண்டுதோறும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நடத்தி வருகின்றன. முதன்முதலில் கடந்த 1992-ம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகள் இந்திய பெருங்கடலில் ‘மலபார்’ கூட்டு பயிற்சியை தொடங்கின. அதன்பின், 2015-ம் ஆண்டில் இந்த கூட்டு கடற்படை பயிற்சியில் ஜப்பானும் நிரந்தர பங்கேற்பாளராக இணைந்தது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 3 நாடுகளும் கூட்டு ...

Read More »