கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அகில இலங்கை தாதிமார் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.
தாதிமார் உட்பட சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயத்தில் சுகாதார அமைச்சும் மாகாண சுகாதார அதிகாரிகளும் தலையிடவில்லை என அகில இலங்கை தாதிமார் சங்கத்தின் எஸ்.பி மடிவட்ட தெரிவித்துள்ளார்
.கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் எடுக்கவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதாரதரப்பினருக்கு வேண்டுகோள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.