செய்திமுரசு

ஆஸ்திரேலிய கடற்கரையில் உயிரிழந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக உயர்வு

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 460 பைலட் திமிங்கலங்கள் கடந்த 21-ம் தேதி திடீரென கரை ஒதுங்கின. பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல முடியாமல் தத்தளித்து வந்தன. தகவல் அறிந்து திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பகுதிக்கு விரைந்து சென்ற அரசு ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் பலர் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு ...

Read More »

ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத காலம் காத்திருந்தனர்!

ஆஸ்திரேலியாவை செல்லும் முயற்சியில், கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியா சென்ற 11 வியாட்நாமியர்கள், அங்கிருந்து ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத காலம் காத்துக் கிடந்துள்ளனர். பின்னர், ஜூன் 1 அன்று ஆஸ்திரேலியா நோக்கி 11 வியாட்நாமியர்களுடன் கிளம்பிய படகு ஒரு சில நாட்களிலேயே பழுதடைய ஆளில்லா தீவான Jaco தீவில் கரை ஒதுங்கியிருக்கின்றனர். அங்கு வெட்டவெளியிலேயே இரண்டு இரவுகளை கழித்து இவர்களை, கிழக்கு திமோர் நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று சூழலினால் தீவு நாடான கிழக்கு திமோரியிலேயே இவர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் ...

Read More »

இந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா?

“தமிழ்த் தேசியத்திலும் தமிழர் நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் காலத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் கருதி மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து ஓரணியில் திரளவேண்டியது அவசியம். இல்லையேல் நாம் தொடர்ந்தும் இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படும்” என, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உப தலைவரும் இணை பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்  அளித்த விசேட செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். அவரது செவ்வியின் முழு விவரம் வருமாறு, கேள்வி :- இந்தியாவை மீறி ...

Read More »

என்னுடய ஆடைகள் வேண்டும்: அலெக்ஸி நவால்னி

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, தான் மயக்கமடைந்தபோது அணிந்திருந்த ஆடைகளை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கூறுகையில், “ நான் ஒன்றில் மட்டும்தான் ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய ஆடைகள். நான் மயக்கமடைந்திருந்தபோது அணிந்திருந்த ஆடைகள் எனக்கு வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ‘ஆகஸ்ட் 20 ஆம் தேதி அலெக்ஸி தங்கியிருந்த ஓட்டல் அறையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் காலி பிளாஸ்டிக் மினரல் வாட்டர் பாட்டில்கள் கிடைத்தன. அதனை நாங்கள் ஜெர்மன் ஆய்வகத்துக்கு அனுப்பினோம். அதன் முடிவில் அலெக்ஸி நவால்னிக்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இணைந்து பாரிய கடற்படை ஒத்திகை

இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இணைந்துமுன்னெடுக்கும் பாரிய கடற்படைஒத்திகைஇன்று இந்துசமுத்திரத்தின்கிழக்குபகுதியில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த ஒத்திகையில் அவுஸ்திரேலியாவின் எச்எம்எஸ் ஹோபார்ட் நாசகாரி இந்தியாவின் அதிநவீன கடற்படை கப்பல்களான ஐஎன்எஸ் சஹ்யாட்ரி,கர்முக் ஆகியன இணைந்துகொள்கின்றன. இரண்டு நாடுகளின் ஹெலிக்கொப்டர்களும் இந்த ஒத்திகையில் பங்கெடுக்கவுள்ள அதேவேளை இந்தியா தனது அதநவீனஅதிவேக கடலோரா கண்காணி ப்பு விமானத்தை இந்தஒத்திகையில் ஈடுபடுத்தவுள்ளது.     இயங்கும் தன்மையை நோக்கமாக கொண்ட இந்த பயிற்சியின் போது அதநவீன தரையிலிருந்து வானில் காணப்படும் இலக்குகளை தாக்கும் ஆயுதங்களையும் பரிசோதனை செய்யவுள்ளதாக இந்திய கடற்படை ...

Read More »

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக சம்பந்தனும் மனு

அரசியலமைப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயர் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார். ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் பாராளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

முகமாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட மண்டை ஓடு எலும்புக்கூடு பெண் போராளியின் என அடையாளம்

பளை முகமாலையில் முன்னர் விடுதலைப் புலிகளின் முன்னரங்கு காவல் பகுதியில் அகழ்வு மேற்கொள்ள இராணுவத்தினர் நீதிமன்ற உத்தரவை பெற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் நேற்று (23) அகழ்வு பணியின் போது இரு பெண் போராளிகளின் இலக்க தகடுகள், ஒரு தொகுதி எலும்புக்கூடுகள், மற்றும் சீருடைகள் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் ஆயுதங்கள் மற்றும் எலும்புக் கூடுகள் இருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பகுதியை தோண்டி ஆராய நீதிமன்ற அனுமதியை ...

Read More »

பூவெலிக்கடவில் உதிர்ந்த பூக்கள்!

கண்டி பூவெலிக்கட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. அந்த உயிர்களின் பெறுமதி குறித்த கேள்வியே எம் முன் நிற்கும் கேள்வி. அவர்கள் பாதுகாப்பான ஒரு இல்லத்தில்தான் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அருகாமை வீடு பாதுகாப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்டதனால் அம்மாவும் அப்பாவும் குழந்தையும் என ஓர் அழகிய குடும்பம் இந்தமண்ணில் இருந்து பிரிந்து இலங்கை நாட்டுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துச் செல்கிறது. அந்தப் பாடம்தான் மதிப்பாய்வு. கடந்த பாராளுமன்ற காலத்தில் (2015 -2020) ஓர் இனத்தின் / ...

Read More »

11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி

இலங்கையை சேர்ந்த அகதி ஒருவர் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்த போதிலும் 11 வருடங்களாக குடியேற்றவாசிகளுக்கான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெரும்பான்மையினத்தை சேர்ந்த அந்த நபரின் உண்மையான பெயரை வெளியிடவிரும்பாத கார்டியன் அலெக்ஸ் என்ற பெயரை பயன்படுத்தி அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து செய்திவெளியிட்டுள்ளது. அலெக்சிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என கார்டியன் தெரிவித்துள்ளது. எனினும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முறையினால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் அலெக்ஸ் என கார்டியன் ...

Read More »

2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்

கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. பசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. பனிக்கட்டிகளில் இருந்து உருகும் நீரானது மொத்த உலக கடல் மட்ட உயர்வுகளில் மூன்றில் ஒரு ...

Read More »