இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இணைந்துமுன்னெடுக்கும் பாரிய கடற்படைஒத்திகைஇன்று இந்துசமுத்திரத்தின்கிழக்குபகுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த ஒத்திகையில் அவுஸ்திரேலியாவின் எச்எம்எஸ் ஹோபார்ட் நாசகாரி இந்தியாவின் அதிநவீன கடற்படை கப்பல்களான ஐஎன்எஸ் சஹ்யாட்ரி,கர்முக் ஆகியன இணைந்துகொள்கின்றன.

இரண்டு நாடுகளின் ஹெலிக்கொப்டர்களும் இந்த ஒத்திகையில் பங்கெடுக்கவுள்ள அதேவேளை இந்தியா தனது அதநவீனஅதிவேக கடலோரா கண்காணி ப்பு விமானத்தை இந்தஒத்திகையில் ஈடுபடுத்தவுள்ளது.

இயங்கும் தன்மையை நோக்கமாக கொண்ட இந்த பயிற்சியின் போது அதநவீன தரையிலிருந்து வானில் காணப்படும் இலக்குகளை தாக்கும் ஆயுதங்களையும் பரிசோதனை செய்யவுள்ளதாக இந்திய கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒத்திகை இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்துவருவதை வெளிப்படுத்துகின்றது குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்துள்ளது என அவர்தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal