11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி

இலங்கையை சேர்ந்த அகதி ஒருவர் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்த போதிலும் 11 வருடங்களாக குடியேற்றவாசிகளுக்கான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பெரும்பான்மையினத்தை சேர்ந்த அந்த நபரின் உண்மையான பெயரை வெளியிடவிரும்பாத கார்டியன் அலெக்ஸ் என்ற பெயரை பயன்படுத்தி அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து செய்திவெளியிட்டுள்ளது.

அலெக்சிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என கார்டியன் தெரிவித்துள்ளது.

எனினும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முறையினால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் அலெக்ஸ் என கார்டியன் தெரிவித்துள்ளது.
அவர் கடந்த பத்து வருடங்களாக தனதுகுடும்பத்தவர்களை சந்திக்கவில்லை பத்து வயது மகனை பார்க்கவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது.

பத்து வருடங்களுக்கு பின்னர் நான் சுதந்திரமாக வாழ விரும்புகின்றேன் எனஅவர் தடுப்பிலிருந்து தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார்.

2010 இல் அலெக்ஸ் இலங்கையிலிருந்து தப்பி அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.
அவரது நிலைமையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் மிகவும் அவசரமான நிலை என வர்ணித்திருந்தது என கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

சிங்கள கத்தோலிக்க சமூகத்தினை சேர்ந்த அலெக்ஸ் எதிர்கட்சிகளுடன் அவருக்கு இருந்த தொடர்பினால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் அவரது வர்த்தக சகாவை படையினர் கடத்தினார்கள் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டார் என கார்டியன் தெரிவித்துள்ளது.


இலங்கையில் வன்முறைகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து அலெக்சும் வேறு 31 பேரும் தங்களிடமிருந்த பணத்தை பயன்படுத்தி சிறிய மீன்பிடிபடகினை வாங்கி 2009 மார்ச் மாதம் 31 ம் திகதி இலங்கையின் சிறிய துறைமுகமொன்றிலிருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டனர் என கார்டியன் தெரிவித்துள்ளது.

ஏப்பிரல் 22 ம் திகதி அவர்கள் அவுஸ்திரேலியா வந்து சேர்ந்தனர் எனினும் அவுஸ்திரேலிய கடற்படையினர் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவுகளுக்கு அருகில் அவர்களை தடுத்து நிறுத்தி முகாமுக்கு அனுப்பியுள்ளனர்.

படகுப்பயணத்தை ஏற்பாடு செய்தவர் என்றஅடிப்படையில் அலெக்சிற்கு ஆதாயம் எதுவும் இல்லாதபோதிலும் குறிப்பிட்ட படகு அவரின் பெயரில் பதியப்பட்டிருந்ததன் காரணமாக அவுஸ்திரேலியர்கள் இல்லாதவர்களை அழைத்து வரமுயன்றார் என அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 2010 இல் அலெக்சிற்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்ப்பட்டது என கார்டியன் தெரிவித்துள்ளது.

எனினும் அவர் மேல்முறையீடு செய்ததைதொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் அலெக்ஸ் மிகவும் அவசரமான நிலையிலேயே படகுப்பயணத்தை ஏற்பாடு செய்தார் என தெரிவித்து அவருக்கு எதிரான தண்டனையை இரத்துச்செய்தது. அதன் பின்னர் அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.


அலெக்சிற்கு எதிரான தீர்ப்பு இரத்துச்செய்யப்பட்ட போதிலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டபோதிலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவரைசமூகத்துக்குள் விடுதலை செய்யவில்லை,அவர் தொடர்ந்தும் குடிவரவு தடுப்புமுகாமிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது.

அவரை பல தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்துள்ளனர், இரண்டு தடவை கிறிஸ்மஸ்தீவுக்கு அனுப்பியுள்ளனர்,அவர் தன்னை அதிகாரிகள் திருப்பியனுப்பலாம் என அச்சம் கொண்டுள்ளார்,நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டால் அவரது கையடக்க தொலைபேசி பறிமுதல்செய்யப்படலாம் என கார்டியன்தெரிவித்துள்ளது.

கார்டியன்