முதல் இரண்டு டெஸ்டிலும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரகானே, மெல்போர்னில் சதம் அல்லது இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு டெஸ்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ரகானே அரைசதம் அடித்தார். அடிலெய்டில் 2-வது இன்னிங்சிலும், பெர்த்தில் முதல் இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார். அவரால் அரைசதத்தை சதமாக ...
Read More »செய்திமுரசு
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?
படுகொலைசெய்யப்பட்டார் காந்தி. மரணச் செய்தியை உள்ளடக்கிக்கொண்டு டெல்லியின் வீதிகள் வழியே பயணப்பட்டபோதே விஸ்வரூபம் எடுத்திருந்த கோட்ஸேவின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட சாம்பல் நிறப் புகை பெரும் கருமேகமாகி நாட்டின் மேல் பரவுகிறது. மக்கள் வெடித்தழுகிறார்கள். பேரதிர்ச்சி, தாங்கொணா துயரம், கட்டுக்கடங்கா வலி. எல்லோர் மத்தியிலும் இரண்டு கேள்விகள். ‘‘ஐயோ… இது உண்மைதானா?’’, ‘‘கொலையாளி யார்?’’ பிரிவினைக் கலவரங்களின் ரத்தச்சகதிக்கு நடுவே ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த இந்திய அரசுக்கு இரண்டாவது கேள்வி எவ்வளவு பெரிய ஆபத்தைச் சுமந்திருக்கிறது என்பது தெரியும். ஆகவே, இரண்டாவது கேள்விக்கான பதிலுடன் இணைத்தே முதல் ...
Read More »இசைக்குள் உயிர்ப்பலி வாங்கிய சுனாமி!
இந்தோனேசியாவை தாக்கிய சுனாமிக்கு சுமார் 300 பேர் பலியாகி உள்ள நிலையில், இசை நிகழ்ச்சியில் சுனாமி புகுந்து மக்களை அடித்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. ...
Read More »கூட்டமைப்பினர் சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துச் செல்லும் நிலைமை காணப்பட வில்லை!
நீண்டகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துச் செல்லும் நிலைமை காணப்பட வில்லை.தற்போது அச்சந்தர்ப்பம் அவர்களுக்கு கிட்டியுள்ளது.இது ஜனநாயத்திற்கு கிடைத்துள்ள ஒரு நல்ல விளைவாகும் என்று அரச நிறுவனங்கள்,மலைநாட்டு உரிமைகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். புதிய அமைச்சரவையில் பதவியேற்றபின் கண்டிக்கு விஜயம் செய்த அவர் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின் மல்வத்தை மகாநாயக்கத் தேரர் வண வாரியப்பொல ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள,அஸ்கிரிய பீட மகாநாயகத் தேரர் வண வரகாகொட ஞானரத்ன ஆகியோரை ...
Read More »வடக்கில், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிப்பு!
வடக்கில், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பெய்ந்த கனமழையை அடுத்து, ஏற்பட்ட வௌ்ளத்தினால், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read More »அவுஸ்திரேலியாவின் உயரமான மலைச்சிகரத்தில் ஏறி சாதனை! 8 வயது இந்திய சிறுவன்!
அவுஸ்திரேலியாவின் உயரமான மலைச் சிகரத்தில் ஏறி தெலுங்கானாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனைப் படைத்துள்ளான். இந்தியா, ஐதராபாத்தைச் சேர்ந்த சமன்யு பொத்துராஜ்(8) என்ற சிறுவன், அவுஸ்திரேலியாவின் மிக உயரமான மலையான கொஸ்கியஸ்கோவின் மீது ஏறி சாதனை படைத்துள்ளான். சமன்யு கடந்த 12ஆம் திகதி தனது தாய், சகோதரி உட்பட 5 பேருடன் இந்த மலையில் ஏறி இந்த சாதனையை படைத்தான். ஏற்கனவே, தான்சானியாவில் உள்ள கடல் மட்டத்தில் இருந்து 5,895 அடி உயரம் கொண்ட மலைச் சிகரத்தில் ஏறி இந்த சிறுவன் சாதனை ...
Read More »52 நாள் ஆட்சிக் குழப்பத்தின் பின்விளைவுகள்!
மதம் தத்துவம் ஆகியவற்றில் மட்டுமல்ல சமகால அரசியல் மற்றும் தார்மீக வாழ்விலும் நாங்கள் புதிய அறம் சார் நோக்கு நிலைகளை மீளச் சிந்திக்கவும் மீட்டுப் பார்க்கவும் மீள உருவாக்கவும் வேண்டிய தேவை இருக்கிறது.’ – பேராசிரியர்.மைத்ரி விக்ரமசிங்க(ரணில் விக்ரமசிங்கவின் துணைவி) 52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் முடிவிற்கு வந்துவிட்டது. இதன் விளைவுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம். முதலாவது விளைவு- மைத்திரியை அது நவீன துக்ளக் மன்னனாக வெளிக்காட்டியிருக்கிறது. இலங்கைத்தீவை இதுவரையிலும் ஆண்ட அனைத்துத் தலைவர்களிலும் அதிகம் பரிகசிக்கப்பட்ட கேவலமாக விமர்சிக்கப்பட்ட ஒரு தலைவராக ...
Read More »மேற்கு இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அலை: 43 பேர் பலி- 500-க்கும் மேற்பட்டோர் காயம்!
மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா – சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் உள்ள கடற்கரை பகுதியான சுந்தா ஸ்ட்ரேய்ட் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.27 மணிக்கு திடீரென சுனாமி அலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பாண்டேக்லாங்க், செராங் மாவட்டங்களும் உள்ளானது. இதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430 வீடுகள், 9 ஹோட்ட்கள், 10 படகுகள் சேதமடைந்தது. அனாக் கிராகட்டாயு என்ற எரிமலை வெடித்ததன் ...
Read More »ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: மெல்போர்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட் 18-ந்திகதி முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் இன்று மெல்போர்னில் பயிற்சியை தொடங்கினார்கள். பெர்த் டெஸ்ட் கடந்த 14-ந்திகதி முதல் 18-ந்திகதி வரை நடைபெற்றது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என அழைக்கப்படும் 3-வது போட்டி மெல்போர்னில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. இரண்டு டெஸ்டிற்கும் இடையில் சுமார் 8 நாட்கள் இடைவெளி உள்ளது. 18-ந்திகதி பெர்த்தில் முடிந்த டெஸ்டிற்குப்பின் இந்தியா பயிற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டனர். மெல்போர்ன் மைதானம் ...
Read More »அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சி!
அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ஜனாதிபதியுடன் சேர்த்து 32 அமைச்சர்கள் காணப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டின் அடிப்படையில் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதால் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பொன்றின் போதே ஐக்கியதேசிய கட்சி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலானஐக்கியதேசிய கட்சியின் நால்வர் கொண்டகுழுவினர் சில நாட்களிற்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்து ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			