மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா – சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவில் உள்ள கடற்கரை பகுதியான சுந்தா ஸ்ட்ரேய்ட் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.27 மணிக்கு திடீரென சுனாமி அலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பாண்டேக்லாங்க், செராங் மாவட்டங்களும் உள்ளானது. இதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430 வீடுகள், 9 ஹோட்ட்கள், 10 படகுகள் சேதமடைந்தது.
அனாக் கிராகட்டாயு என்ற எரிமலை வெடித்ததன் மூலம் இந்த சுனாமி அலை தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் என இந்தோனேசிய பேரிடர் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சுனாமி ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.
Eelamurasu Australia Online News Portal