அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஜனாதிபதியுடன் சேர்த்து 32 அமைச்சர்கள் காணப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டின் அடிப்படையில் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதால் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பொன்றின் போதே ஐக்கியதேசிய கட்சி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலானஐக்கியதேசிய கட்சியின் நால்வர் கொண்டகுழுவினர் சில நாட்களிற்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வேண்டுகோளை ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்
தேர்தலில் மக்களின் ஆணை தேசிய அரசாங்கத்திற்கே வழங்கப்பட்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஜனாதிபதி தேசிய அரசாங்கத்திற்கான வேண்டுகோளை நிராகரித்துள்ளார்.